×

சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் இது தான்... உலா வரும் பரபரப்பு தகவல்கள்

நடிகர் சூர்யாவிற்கு கொரோனா இதனால் தான் பரவி இருக்கக்கூடும் என்ற தகவலால் கோலிவுட்டில் சலசலப்பு நிலவி வருகிறது. 
 

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் சூரரைப் போற்று. இப்படம் ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நல்ல விமர்சனத்துடன் படம் ஆஸ்கார் ரேஸிலும் இணைந்து இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் படம் வாடி வாசல். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை வைத்தே, உருவாக இருக்கும் இப்படத்திற்கு 'வாடிவாசல்' எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில், தனக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் இருந்து மீண்டு இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும்  உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என சூர்யா ட்வீட் போட்டு இருந்தார். இது கோலிவுட்டினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை சூர்யா சீக்கிரம் குணமடைய வேண்டும் என கவலையில் இருக்கிறார்கள்.


இந்நிலையில், சூர்யாவிற்கு இந்த கொரோனா தொற்று ஏற்பட்ட காரணம் குறித்த தகவல் ஒன்று உலா வருகிறது. சமீபத்தில் தன்னுடைய ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நேரடியாக சென்றார். இதுகுறித்த புகைப்படங்களும், செய்திகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. அப்போது தன்னுடைய ரசிகர்களுடன் கைகுலுக்குவது, போட்டோ எடுப்பதும் என வழக்கம் போல் இருந்தார். அந்த சூழலில் தான் கொரோனோ பரவியது எனக் கூறப்படுகிறது. மேலும், அங்கு தன்னிடம் பேசிய ரசிகர்களை கொரோனோ பரிசோதனை செய்துக் கொள்ள சூர்யா தனது நெருங்கிய வட்டாரத்தில் மூலம் செய்தி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News