×

மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் சூர்யா - மாஸ் அப்டேட்!

சூரரை போற்று படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு சூர்யாவின் அடுத்த படம் குறித்த செம ஹேப்பி நியூஸ் கிடைத்துள்ளது.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சூர்யா நடித்த படம் ’24’. இப்படத்தை விக்ரம் குமார் இயக்கினார். இதில், சமந்தா, நித்யா மேனன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்தனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், 24 படத்தை குறித்து இயக்குனர் விக்ரம் குமார் பிரபல தனியார் இணையதள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் சூர்யாவிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும் அது அவருக்குப் பிடித்துள்ளதாகவும் வரும் 2021 ஆம் ஆண்டில் புதிய படம் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, சூர்யா ஹரியின் அருவா, வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் அடுத்து விக்ரம் குமார் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News