Categories: Cinema News latest news

பாதாளத்தில் கிடக்கும் பாலிவுட்!..ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த சூர்யா-ஜோதிகா…

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் சமீபத்தில் தேசியவிருதை பெற்று ஒரு மதிப்புமிகு நடிகராகவும் விளங்கி வருகிறார். ஜெய்பீம் படத்திற்கு பிறகு சூர்யாவின் மவுசு அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.

அதை விட்டு அப்படியே திரும்பி பார்த்தால் விக்ரம் படத்தில் அவர் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் இவரை புகழின்
உச்சிக்கே கொண்டு போய் சேர்த்தது. யாரும் எதிர்பார்க்காத அளவில் தோன்றிய அந்த கதாபாத்திரத்தின் தாக்கம்
இன்னும் ரசிகர்களின் மனதில் அச்சாணி அடித்தாற் போல பதிந்து விட்டது.

நடிப்பையும் தாண்டி படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வரும் சூர்யா தனது மனைவியும் நடிகையுமான
ஜோதிகாவுடன் இணைந்து 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழில் சில படங்களை தயாரித்திருக்கின்றனர். இப்போது இந்த ஜோடி பாலிவுட் பக்கம் தலை சாய்த்திருக்கிறது. ஏற்கெனவே தமிழில் வெளியாகி வெற்றி நடைபோட்ட சூரரை போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கையும் ஹிந்தியில் சூர்யாவின் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இதையும் படிங்க : கமலை பார்த்து கமல் எங்கே? என்று கேட்ட நடிகர்… பங்கமாய் கலாய்த்த உலகநாயகன்…. தரமான சம்பவம்…

அது மட்டுமில்லாமல் ஹிந்தியில் சில படங்களை தயாரிக்கும் பணியில் சூர்யாவும் ஜோதிகாவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மும்பையிலேயே செட்டிலாகி விட்டனராம். அவ்வப்போது வேலை இருந்தால் இங்கு வருகிறார்களாம். மற்றபடி இருவரும் அங்கேயே செட்டிலாகி விட்டனர் என்று நம்பத்தகுந்த செய்திகள் வெளிவந்தன. ஏற்கெனவே அதாள குழியில் இருக்கும் ஹிந்தி சினிமாவை இவர்களாவது நிலை நிறுத்தட்டும். சூர்யா மும்பையில் செட்டிலானதை அறிந்த ரசிகர்கள் சிலர் கொஞ்சம் வருத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini