Categories: Cinema News latest news

விளம்பரங்களே போதும் போல… படத்துக்கு இவ்வளோ கம்மியாவா? ஆச்சரியப்பட வைக்கும் சூர்யாவின் சொத்து மதிப்பு…

Surya: நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்குள் வந்த நடிகர் சூர்யா இன்று பெரிய இடத்தினை அடைந்து இருக்கிறார். தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யாவின் சொத்து மதிப்பை கேட்டால் பலருக்கும் வாவ் சொல்ல வைக்கும்.

முதலில் கார்மெண்ட் ஃபேக்டரியில் எட்டு மாசம் வேலை செய்து வந்தார் சூர்யா. ஆனால் அவரின் முதலாளிக்கு கூட இவர் நடிகர் சிவகுமாரின் மகன் என்பது தெரியாதாம். முதலில் வசந்திடம் இருந்து ஆசை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் சினிமாவின் மீது ஆர்வம் இல்லாமல் அதை மறுத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: இன்று வரை தன் படத்தையேப் பார்க்காத டி.ராஜேந்தர்… காதல் தோல்வி படத்திற்குப் பின் இப்படியும் ஒரு சோகமா..?

இதையடுத்து மணிரத்னம் தயாரிப்பில் நேருக்கு நேர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் சூர்யாவும் நடிக்க ஒப்புக்கொண்டார். நேருக்கு நேர் படத்தில் தொடங்கிய சூர்யாவின் பயணம் இன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா வரை வந்து இருக்கிறது. அடுத்து பாலிவுட்டிலும் சூர்யா கர்ணா படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிப்பு மட்டுமல்லாமல் சூர்யா தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்துக்கு 2டி எண்டெர்டெயிண்மெண்ட் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மூலம் 24 வயதினிலே, 24, சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களை தயாரித்து இருந்தார்.

இதையும் படிங்க: பணத்துக்காக இவ்ளோ மலிவா போயிட்டாரே! சுத்த அயோக்கியத்தனம்.. இசைஞானிக்கு சவுக்கடி கொடுத்த பிரபலம்

சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்துக்கு 25 முதல் 30 கோடிக்குள் தான் சம்பளமாக வாங்கினார் எனவும் தகவல் தெரிவிக்கிறது. இப்படத்தினை தொடர்ந்து 2 வருடங்களை கடந்தும் சூர்யாவின் நடிப்பில் இதுவரை எந்த படமும் ரிலீஸாகவில்லை. லேட்டஸ்ட்டாக கங்குவா படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 2 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

சன் பீஸ்ட், பெப்சி, குளோசப், க்குகர், காம்ப்ளான், டிவிஎஸ், சரவணா ஸ்டோர், நெஸ்கவே உள்ளிட்ட பிரபல விளம்பரங்களில் சூர்யா நடித்திருக்கிறார். ஜாக்குவார் எக்ஸ்ஜே எல், ஆடி க்யூ7, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட உயர்ரக கார்களை வைத்திருக்கிறார். சென்னையில் ப்ளஸ் பங்களாவை வைத்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகாவும் தனியாக சம்பாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily