ஈகோவை உடைத்து நம்ம சுள்ளானை முதல் ஆளாக பாராட்டிய சூர்யா...
துள்ளுவதோ இளமை, சுள்ளான் போன்ற ஆரம்பகால படங்களில் அதிகம் கலாய்க்கப்பட்டு, எல்லாராலும் கிண்டலுக்கு ஆளானவர் தனுஷ்.
Sat, 19 Dec 2020

அவரது விடா முயற்சி இன்று நெட்ஃப்ளிக்ஸ் தயாரிப்பில் அதிக செலவில் தயாராகும் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த வெற்றி இவரது உழைப்பிற்கும் விட முயற்சிக்கும் கிடைத்தது தான்.
கோலிவுட்டில் இருந்து நம்ம ஆளு ஹாலிவுட்டிற்கு பெருமை தானே. இதற்கு யாரெல்லாம் வாழ்த்து தெரிவித்தார்கள் என தெரியவில்லை. ஆனால் நம்ம சூர்யா முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என்ன தான் நடிகர்களுக்குள் ஈகோ இருந்தாலும் இது போன்ற வெற்றியை எந்த பாரபட்சமும் பார்க்காமல் பாராட்டுவதற்கு தனி மனசு வேண்டும். அந்த நல்ல குணம் நம்ம சூர்யாவிடம் உள்ளது.