Categories: Cinema News latest news

சுந்தர். சியால எல்லாமே பண்ண முடியும்!.. அரண்மனை 4 டிரெய்லர் ரிலீஸ்.. வெடிகுண்டை போட்ட தமன்னா!..

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட் என்பது போல இதுவரை வெளியான அரண்மனை படங்களின் 3 பாகங்களுமே சோதித்து எடுத்த நிலையில், 4ம் பாகம் தற்போது ரெடியாகி விட்டது. பொங்கலுக்கே அரண்மனை 4 ரிலீஸ் என அறிவிப்பெல்லாம் வந்தது.

ஆனால், கடைசியில் இப்போ வந்தா டோட்டல் டேமேஜ் ஆகிவிடுவோம் என நினைத்து ரிலீஸை தள்ளிப் போட்டனர். இந்நிலையில், சம்மர் ரிலீஸாக அரண்மனை 4 வெளியாக உள்ள நிலையில், இன்று அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதையும் படிங்க: ஆர்.கே.செல்வமணி இயக்கிய டாப் 5 ஹிட் படங்கள்!.. மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன்…

ராகவா லாரன்ஸ் ஒரு பக்கம் காஞ்சனா சீரிஸ் படங்களை எடுத்து வந்த நிலையில் இன்னொரு பக்கம் சுந்தர். சி அரண்மனை படங்களை எடுத்து வருகிறார். ஒரு பெரிய அரண்மனையில் ஏதாவது ஒரு பெண்ணுக்கு அதுவும் சுந்தர் சி யின் தங்கை, அல்லது தங்கையின் கணவருக்கு பேய் பிடித்து விடும். அந்தப் பேயை எப்படி கிளைமாக்ஸில் அம்மனின் அருள் கொண்டு ஓட்டுகிறார் என்பதுதான் அரண்மனை படங்களின் கதையாக உள்ளது.

அரண்மனை 4 டிரைலர் இன்று வெளியாகி உள்ள நிலையில் சுந்தர். சி- யின் தங்கையாக நடித்துள்ள தமன்னா தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை அவரது மரணம் கொலையா என விசாரிக்க வரும் வழக்கறிஞராக நடித்து இருக்கிறார் சுந்தர். சி.

இதையும் படிங்க: என் லைஃப்லயே கஷ்டப்பட்டு பாடின பாட்டு அதுதான்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன எஸ்.ஜானகி…

ஆனால், தமன்னாவே பேயாக சுற்றுகிறார். போதா குறைக்கு இந்த படத்தில் கேஜிஎஃப் வில்லன் ராமசந்திராவை சாமியராக போட்டிருக்கின்றனர். பாக் எனும் பேயயையும் டிரெய்லரிலேயே அறிமுகப்படுத்துகின்றனர். விஷுவலாக படம் தரமாக இருந்தாலும் கன்டென்ட் அதே பழைய படங்களை நினைவூட்டுகின்றன. படம் ரிலீஸ் ஆனதும் எப்படி இருக்கு என்பதை விரிவாக பார்க்கலாம். டிரெய்லரை பொறுத்தவரையில் நன்றாகவே உள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமன்னா சுந்தர்.சியால முடியாதது எதுவுமே இல்லை என குஷ்புவை வைத்துக் கொண்டே புகழ்ந்து தள்ளியுள்ளார். அரண்மனை 3 படத்தில் அர்யாவுக்கு ஜோடியாக நடித்த ராஷி கன்னா இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க நினைத்து ஓகே சொல்லி கடைசியில் சுந்தர். சிக்கு ஜோடியாகி விட்டார்.

Saranya M
Published by
Saranya M