Connect with us
janaki

Cinema History

என் லைஃப்லயே கஷ்டப்பட்டு பாடின பாட்டு அதுதான்!.. பல வருடங்கள் கழித்து சொன்ன எஸ்.ஜானகி…

தமிழ் சினிமாவில் கானக்குயிலாக நுழைந்தவர்தான் எஸ்.ஜானகி. இவரின் தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழை அழகாக உச்சரித்து பாடக்கூடிய பாடகி இவர். கருப்பு வெள்ளை காலத்திலிருந்து பாடத்துவங்கிய பாடகி இவர். அப்போது படங்களில் பல பாடல்களையும் பாடி வந்த பி.சுசிலாவை பாட வைக்க முடியவில்லை எனில் தயாரிப்பாளர்களின் ஒரே சாய்ஸ் ஜானகிதான்.

அதுவும் இளையராஜா சினிமாவுக்கு வந்தபின் அவரின் இசையில் பல இனிமையான, மனதை மயக்கும் பாடல்களை ஜானகி பாடினார். இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளி படத்தில் ஜானகி பாடிய ‘அன்னக்கிளி உன்னை தேடுதே’, மச்சான பாத்தீங்களா ’ஆகிய பாடல்களை ஜானகியே பாடினார். இந்த பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

இதையும் படிங்க: திடீரென சம்பளத்தை உயர்த்திய பிரபல பாடகி!.. எஸ்.ஜானகிக்கு வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்…

அதன்பின் ராஜாவின் இசையில் தனியாகவும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்தும் பல நூறு பாடல்களை ஜானகி பாடினார். அப்போதெல்லாம் கதாநாயகிகள் தனியாக மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ பாடும்படி படத்தில் ஒரு பாடல் கண்டிப்பாக வரும். அந்த பாடல்களை பெரும்பாலும் ஜானகியே பாடினார்.

janaki

குரலை மாற்றி சிறு குழந்தை போலவும், வயதான மூதாட்டி போலவும் பாடுவார் ஜானகி. மேலும், ‘நிலா காயுது நேரம் நல்ல நேரம்’ பாடலில் வருவது போல கிறக்கமான சிணுங்கல்களை அவர் செய்வது போல எந்த பாடகியும் செய்ய முடியாது. ‘பாடவா என் பாடலை’ என ஜானகி பாடினால் எந்த மனமும் உருகும்.

இதையும் படிங்க: உருக்கிய இசை.. இதயத்தை கனக்கச் செய்த வரிகள்.. தேம்பி தேம்பி அழுத ஜானகி

எப்படிப்பட்ட கஷ்டமான பாடல் என்றாலும் அசால்ட்டாக பாடிவிட்டு போய்விடுவார் ஜானகி. ஆனால், அவரே மிகவும் கஷ்டப்பட்டு பாடிய பாடல் ஒன்று இருக்கிறது. இதுபற்றி அவரே ஒருமுறை கூறியிருக்கிறார் ‘நான் 1957ம் வருடம் சினிமா துறைக்கு வந்தேன். எத்தனையோ ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறேன். எதற்கும் நான் கஷ்டப்பட்டதில்லை. ஆனால், ஒரு கன்னட பாடலை பாடமுடியாமல் கஷ்டப்பட்டேன்.

அந்த படத்தின் பெயர் ஹேமாவதி. எல் வைத்தியநாதன் இசையில் உருவான கிளாசிக்கல் பாடல் அது. என்.எஸ்.கோபாலகிருஷ்ணன் வயலில் வாசித்தார். இரண்டு ராகம் கலந்து உருவான பாடல். ஒரு வரி ஒரு ராகத்திலும், அடுத்த வரி மற்றொரு ராகத்திலும் வரும். அது கூட எனக்கு கஷ்டமாக இல்லை. பாடலின் இறுதியில் ஒரு ஸ்வரம் வரும். மிகவும் வேகமான ஸ்வரம். யாராலும் பாடமுடியாது. பயிற்சி எடுத்தால் கூட முடியாது. அதுதான் நான் கஷ்டப்பட்டு பாடிய பாடல்’ என சொல்லி இருந்தார் ஜானகி.

இதையும் படிங்க: காதலை அழகாக பாடிய ஜானகியின் சொல்லப்படாத காதல்!.. எதில் முடிந்தது தெரியுமா?…

google news
Continue Reading

More in Cinema History

To Top