காதலை அழகாக பாடிய ஜானகியின் சொல்லப்படாத காதல்!.. எதில் முடிந்தது தெரியுமா?...

S Janaki: இளையராஜா முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான ‘அன்னக்கிளி’ படத்தில் ‘அன்னக்கிளி உன்ன தேடுதே’ என்கிற பாடலை பாடியவர்தான் எஸ்.ஜானகி. இந்த பாடல் ஜானகியை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. தொடர்ந்து இளையராஜாவின் இசையில் மனதை மயக்கும் பல பாடல்களையும் பாடினார்.

ஜானகி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். டீன் ஏஜ் முதலே இசைக்கச்சேரிகளில் பாடியவர். பல வருடங்கள் இசைக்கச்சேரிகளில் மட்டுமே பாடினார். ஜெமினி - சாவித்ரி நடிப்பில் உருவான ‘கொஞ்சம் சலங்கை’ படத்தில் உருவான ‘சிங்கார வேலனே தேவா’ பாடலை அப்போது முன்னணி பாடகியாக இருந்த பி.சுசிலாவே பாட முடியாது என சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: பலரும் பாட மறுத்த அந்த பாடல்!.. அசால்ட்டா பாடி அசர வைத்த பாடகி எஸ்.ஜானகி!…

ஏனெனில், நாதஸ்வர ஸ்வரத்தோடு இணைந்து பாட வேண்டும். ஆனால், ஜானகி அந்த பாடலை பாடி அசத்தியிருந்தார். இந்த பாடல் அவருக்கு பெயரை வாங்கி தந்தது. இளையராஜா இசையில் ஜானகி பாடிய அனைத்து பாடல்களுமே தேவகானம்தான். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பல அற்புதமான பாடல்களை ஜானகி பாடியிருக்கிறார்.

ஜானகி மேடை பாடகியாக இருந்த போது ராம்பிரசாத் என்பவர் அவருக்கு அறிமுகமானார். ஜானகி கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் நபரின் மகன்தான் இந்த ராம்பிரசாத். ஜானகியின் திறமை வெறும் இசைக்கச்சேரியோடு முடிந்துவிடக்கூடாது. அவர் சினிமாவில் பாடவேண்டும் என தந்தையிடம் ராம்பிரசாத் கூறினார்.

இதையும் படிங்க: மறுநாள் கச்சேரி! முதல் நாள் இரவு மூச்சுத்திணறல் – அரங்கமே கூடியிருக்க பாடகி ஜானகி செய்த மேஜிக்

அவரின் ஆலோசப்படியே சென்னை வந்த ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்தார். இப்படி தனது திரை இசை பயணத்தை துவங்க காரணமாக இருந்த ராம்பிரசாத் மீது ஜானகி கொண்டிருந்த நட்பு பின்னாளில் காதலாகவும் மாறியது. எத்தனையோ கதாநாயகிகளின் காதலை தனது இனிமையான குரலில் வெளிப்படுத்திய ஜானகி தனது காதலை ராம்பிரசாத்திடம் சொல்லவே இல்லை.

ஆனாலும், அவரின் காதல் திருமணத்தில் முடிந்தது. சினிமாவில் வாய்ப்பு தேடும் போதும், ரிக்கார்டிங் தியேட்டருக்கு போகும்போது ஜானகியிடனே ராம்பிரசாத் இருப்பார். தனது முழு வாழ்க்கையையும் ஜானகியின் திரை இசை பாடல்களுக்காகவே ராம்பிரசாத் தியாகம் செய்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: வாலியின் பாடல் வரிகளை பாட முடியாமல் அழுத எஸ்.ஜானகி – அட அந்த பாட்டா?!..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it