×

இந்திய அளவில் பிரபலமான பிக்பாஸ் போட்டியாளர்... ஆரிக்கு எந்த இடம் தெரியுமா?

இந்திய அளவில் பிக்பாஸ் போட்டிகளில் பிரபலமானவர் பட்டியலில் தமிழ் பிக்பாஸ் போட்டியாளர் ஆரி 5-வது இடம் பிடித்திருக்கிறார். 
 

என்டோல்மென்ட் ஷைன் நிறுவனம் தயாரிக்கும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழ் மட்டுமல்லாது இந்திய அளவில் பிரபலம். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. தமிழ் பிக்பாஸ் சீசன் 4 இறுதிக் கட்டத்தை
எட்டியிருக்கிறது. இந்த சீசனின் இறுதிப் போட்டியில் 6 போட்டியாளர்கள் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர். ஆரி , ரம்யா, சோம், கேபி, ரம்யா மற்றும் ரியோ என
ஆறு பேரில் வெற்றியாளர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். 
இந்தநிலையில், தேசிய அளவில் பல்வேறு மொழிகளிலும் சேர்த்து பிக்பாஸ் போட்டியாளர்களில் பிரபலமானவர் யார் என்று ஆன்லைனில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆரி 5-வது இடம் பிடித்திருக்கிறார். இந்தக் கருத்துக் கணிப்பில் இடம்பிடித்தவர்கள் விவரம். 

1. சித்தார்த் சுக்லா

2. அபிஜீத்

3. அசீம் ரியாஸ் 

4. ஷேநாஸ் கில்

5. ஆரி அர்ஜூனா

6. ருபைனா திலக் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News