Categories: Cinema News latest news throwback stories

என்ன பத்தின அந்த விஷயம் தமிழ் சினிமாவில் பலருக்கும் தெரியாது!.. சித்தார்த் வெளியிட்ட ரகசியம்…

2003 இல் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார் நடிகர் சித்தார்த். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த சித்தார்த் அடுத்ததாக ஆயுத எழுத்து திரைப்படத்தில் நடித்தார்.

பிறகு தமிழை விடவும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதனை தொடர்ந்து தெலுங்கில் வரிசையாக படங்களில் நடித்தார். 2013க்கு பிறகு மீண்டும் தமிழில் உதயம் என்.ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா என ஹிட் படங்களாக கொடுக்க துவங்கினார்.

siddharth

அதன் பிறகு தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமே நடிக்க துவங்கினார். அவர் நடித்த சிட்டா திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளதாக பேச்சுக்கள் உள்ளன.

சித்தார்த் சொன்ன ரகசியம்:

இந்த நிலையில் சித்தார்த் பேட்டியில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை கூறியிருந்தார். சித்தார்த் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி அவர் நல்ல பாடகராவார். இதுவரை 20க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவற்றில் முக்கால்வாசி தெலுங்கு பாடல்கள்.

தமிழில் ஜில் ஜங் ஜக் படத்தில் ஷூட் த குருவி என்கிற பாடலை பாடியுள்ளார். மேலும் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாள் என்கிற பாடலையும் சித்தார்த் தான் பாடியுள்ளார்.

பேட்டியில் அவர் கூறும்போது தமிழ் சினிமாவில் பலருக்கும் இந்த விஷயம் தெரியாது. ஒரு முறை சந்தோஷ் நாராயணனின் இசை கச்சேரியில் நான் பாடிவிட்டு வந்தபோது ஒருவர் என்னை பார்த்து தம்பி நீ பாட்டெல்லாம் பாடுவியா என கேட்டார்கள் என தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் சித்தார்த்.

இதையும் படிங்க: நானும் சித்ராவும் எப்படி தெரியுமா? 10 வருஷ லவ்! போட்டோலாம் இருக்கு – யாருப்பா இவரு?

Published by
Rajkumar