×

சரியோ தவறோ என்னிடமே கூறுங்கள் - போன் நம்பரை வெளியிட்ட நடிகை
 

மலையாளத்தில் சக்ரம், நார்த் 24 கோட்டயம், கதா பறஞ்ச கதா, உல்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மஞ்சு பத்துரோஸ்.. இந்நிகழ்ச்சியில்  கலந்து கொண்டார்.
 

49 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலிருந்த பின் அவர் வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அவரது நடவடிக்கையை விமர்சித்து பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக விமர்சித்தனர். 

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர் இதுபற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து, தனது முகநூல் ஒரு பதிவை இட்டுள்ள அவர் ‘நான் என் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். என்னைப்பற்றி தவறான விமர்சனத்தை பலரும் கூறியது தெரியவந்தது. என்னைப்பற்றி எந்த கருத்தானாலும் என்னிடமே நீங்கள் கூறலாம்’ எனக்கூறி தனது செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News