தல அஜித் பாராட்டிய தெலுங்கு படம்... படக்குழுவே வெளியிட்ட சுவாரசிய தகவல்..!

அல்டிமேட் ஸ்டார் அஜித் தமிழ் சினிமாவின் வித்தியாசமான ஒரு மனிதர். என் தொழில் நடிப்பு அதை செய்கிறேன் என தொடர்ந்து செய்து வருகிறார். இந்த ஒரு விஷயத்துக்கே அவரை பெரிதாக கொண்டாடும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். தற்போது வலிமை படத்தில் தல நடித்து வருகிறார். அப்படத்தின் ஒரு அப்டேட்டிற்கு ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.
பெரும்பாலும், தல குறித்த தகவல்கள் அரிதாகவே வெளியாகும். அந்த வகையில், அஜித் ஒரு தெலுங்கு படத்தை பாராட்டி இருக்கிறார். குரு பவன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘இதே மா கதா’. சுமந்த் அஸ்வின், ஸ்ரீகாந்த், பூமிகா, தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பைக் ரேஸிங் குறித்த இத்திரைப்படத்தின் டீசரை தல அஜித் பார்த்து விட்டு படக்குழுவினருக்கு கால் செய்தாராம். அவர்களிடம், எனது நீண்ட கால நண்பர் ராம் பிரசாத் என்னிடம் இத்திரைப்படத்தின் டீசரை காட்டினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும் விதம் உண்மையிலேயே அருமையாக இருக்கிறது. எனக்கு பைக் ரைடிங் பிடிக்கும். அதனால் என்னை எளிதில் டீசருடன் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிந்தது. உங்களை தனிப்பட்ட முறையில் விரைவில் சந்திப்பேன். படக்குழுவுக்கு எனது பாராட்டுக்கள் எனத் தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து, அப்படத்தின் இயக்குனர், அஜித்தின் பாராட்டுகளால் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த படக்குழுவும் பெருமகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம். ஒரு பெரிய நட்சத்திரத்திடம் இருந்து இப்படி ஒரு பாராட்டால் எங்களுக்கு நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
#Thala #AjithKumar's appreciation for #IdheMaaKatha movie teaser!
— BARaju (@baraju_SuperHit) February 1, 2021
Adventure Awaits!The game is getting bigger and bigger! #RidersStory@ajithFC @AjithNetwork@actorsrikanth #SumanthAshwin @bhumikachawlat @TanyaHope_offl @GuruDepuru @gp_productions7 @RamprasadDop @kasyapsunil6 pic.twitter.com/5bXej2qpK4