Categories: Cinema News latest news

நாட்டுக்குத்து பாடலுக்கு ஆஸ்கர் விருது!. ராஜமவுலி மீது செம காண்டில் ஆந்திரா திரையுலகம்..

ஆந்திர திரையுலகில் ஏற்கனவே சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் உச்சம் தொட்டவர் ராஜமவுலி. இந்த படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட அதிக வரவேற்பு தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்து பல கோடிகளை வசூல் செய்து பேன் இண்டியா திரைப்படமாக மாறியது.

இந்த படத்திற்கு பின் ராஜமவுலிக்கு என தனி ரசிகர்களே உருவானார்கள். அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார் ராஜாமவுலி. இப்படமும் பிரம்மாண்ட செலவில் சிறப்பாக உருவானது. இப்படத்திற்கும் ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளார் கீரவாணி இசையமைத்திருந்தார். இவர் ராஜமவுலியின் சித்தப்பா ஆவார்.

RRR

இதுவரை எந்த தெலுங்கு திரைப்படமும் ஆஸ்கர் விருதை பெற்றதில்லை. ஆனால், ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற ‘நாட்டுக்கூத்து’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதற்காக ராஜமவுலி, கீரவாணி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

oscar

ஏ.ஆர் ரகுமான் ஆஸ்கர் விருதை வாங்கிய போது தமிழ் சினிமாவே அதை கொண்டாடியது. அவருக்காக ஒரு விழாவும் எடுக்கப்பட்டது. அதில், இளையராஜாவும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினார்.ஆனால், ஆந்திர திரையுலகத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதோடு, ராஜமவுலி மீது ஒரு அதிருப்தியும் நிலவுகிறது. அதாவது, ஆஸ்கர் விருது செய்தி வந்தது முதலே இப்படத்திற்காக பல கோடிகளை கொட்டிய தயாரிப்பாளரை அவர் எங்கேயும் முன்னிறுத்தவில்லை என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. எனவே, ராஜமவுலி குடும்பம் மட்டுமே அதை கொண்டாடி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்பு தரமா இருக்கு!.. புடவையை விலக்கி காட்டி சூடேத்தும் ரேஷ்மா!…

Published by
சிவா