Thalaivar 170: இப்போதெல்லாம் பல நூறு கோடிகளை இறைத்து படம் எடுத்து பேன் இண்டியா படம் என சொல்லி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து வெளியிட்டு தயாரிப்பாளர் நன்றாக கல்லா கட்டுகிறார்கள். கர்நாடகாவில் உருவான கேஜிஎப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய படங்கள் தமிழகத்திலும் நல்ல வசூலை பெற்றது.
அதேபோல், தெலுங்கில் உருவான பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் அனைத்து மொழிகளில் நல்ல வசூலை பெற்று சாதனை படைத்தது. எனவே, இப்போது பெரிய மாஸ் நடிகர்கள் பேன் இண்டியா படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். பிரபாஸ், ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்கள் பேன் இண்டியா படமாகவே உருவாகி வருகிறது.
இதையும் படிங்க: வாவ் செம மெர்சலா இருக்கே!.. தலைவர் 170 லுக்குல ரஜினிய பாருங்க!.. வெளியான புகைப்படம்..
ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திலும் மோகன்லாலையும், சிவராஜ் குமாரையும், சுனிலையும் நடிக்க வைத்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சன் பிக்சர்ஸ் நன்றாக கல்லா கட்டினார்கள். இப்போது விஜய் நடித்து வரும் லியோ படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படதிற்காக விஜய்கு ரூ.125 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.
இந்த படத்திலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஒருபக்கம், ஜெயிலர் படம் மெஹா ஹிட் அடித்துள்ள நிலையில் ஞானவேல் இயக்கதில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்க துவங்கிவிட்டார். சமீபத்தில் விமான நிலையத்தில் இந்த படம் பற்றி பேசிய ரஜினி ‘இது ஒரு பிரம்மாண்டமான படமாக உருவாகும்’ என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: ரஜினிக்காக இறங்கி வந்த அமிதாப்பச்சன்!.. கொஞ்சம் பாத்துக் கத்துக்கோங்க ஆண்டவரே!..
இந்த படத்தின் பட்ஜெட்டே ரூ.165 கோடிதான். இதில் ரஜினியின் சம்பளம் ரூ.90 கோடி. மற்ற நடிகர்களின் சம்பளம் ரூ.45 கோடி என சொல்லப்படுகிறது. மீதியிருக்கும் ரூ.30 கோடியில்தான் இந்த படத்தை எடுக்கவுள்ளனர். 30 கோடியில் எடுக்கப்படும் படம் எப்படி ஒரு பிரம்மாண்ட படமாகும் என்பது ரஜினிக்கே வெளிச்சம்.
இந்த படத்தில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், தெலுங்கு நடிகர் ரானா, மஞ்சு வாரியர், துஷரா விஜயன், ரித்திக சிங் என பலரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.
இதையும் படிங்க: பாலசந்தர் அறிமுகப்படுத்தினாலும் ஒரு ஸ்டாராக மாற்றிய இயக்குனர்! நன்றிக்கடனா ரஜினி செய்த செயல்
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…