தளபதி விஜய் தற்போது [பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்த பட ஷூட்டிங்கிற்காக காத்திருக்கிறார். விஜயின் 66 திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். தெலுங்கு பட முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் விஜய்யின் வழக்கமான ஆக்ஷன் படமாக இருக்காது என கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன் – இவர நம்பி எல்லா படமும் போச்சே!… தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் சூரி….
இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டு ஓர் குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாக உள்ளதாம். தற்போது சமீபத்தில் வெளியாகியுள்ள அனைத்து விஜய் படங்களும் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இந்தத் திரைப்படம் மிகவும் சிம்பிளாக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாம். இப்படம் காதல் கதையை மையமாக கொண்டுள்ளதால் பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. அனேகமாக படத்தின் ஹீரோயின் என மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…