நடிகை கண்ணீர்விட்டது இதனால்தானாம்... உச்சுக் கொட்டும் கோலிவுட்

பாலிவுட்டில் அறிமுகமாகி தென்னிந்திய சினிமா இண்டஸ்டிரிக்கள் வரை கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகை அவர். அவர் நடித்திருக்கும் படம் பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படவிழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு விட்டாராம்.
நான் எப்போதும் இப்படி இல்லை. இவங்க கொடுத்த மரியாதை யாருமே கொடுத்ததில்லை என கண்ணீர்விட்டவர், தென்னிந்திய சினிமாவை ஏகத்தும் புகழ்ந்து தள்ளினார். என்ன காரணம் என்று விசாரித்தால், பாலிவுட்டில் அவர் சந்தித்த பிரச்சனைகள்தான் என்கிறார்கள்.
குரூப்பிஸம், நெப்போட்டிஸம் என தடுமாறிக் கொண்டிருக்கும் பாலிவுட்டில் நீங்கள் பிரபல குடும்பப் பின்னணியில் இருந்து வந்தால்தான் ஜொலிக்க முடியும். செலிபிரட்டி வட்டத்தில் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற எழுதப்படாத விதி இருக்கிறது. அதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட நடிகை தனது மனக் குமுறல்களைக் கொட்டிவிட்டாராம். பாவம்தான் அந்த நடிகை என கோலிவுட்டில் உச் கொட்டுகிறார்களாம்.