×

விஜய் படத்தை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றிய இயக்குனர் – 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிளம்பிய பூதம்!

இயக்குனர் சக்தி சிதம்பரம் மேல் தொழிலதிபர் ஒருவர் பணமோசடி புகார்  புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இயக்குனர் சக்தி சிதம்பரம் மேல் தொழிலதிபர் ஒருவர் பணமோசடி புகார்  புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் சக்தி சிதம்பரம் சார்லி சாப்ளின், இங்கிலிஷ்காரன் மற்றும் மகாநடிகன் ஆகிய படங்களை இயக்கியவர். இவர் சில படங்களை வாங்கி வெளியிட்டு விநியோகமும் செய்து வந்தார். இந்நிலையில் விஜய், அசின், வடிவேலு மற்றும் ராஜ்கிரண் நடிப்பில் உருவான திரைப்படம் காவலன் படத்தின் பெயரை சொல்லி தன்னிடம் 23 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இந்த படம் 2011 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸ் ஆகி வெற்றி பெற்றது. இந்த படத்தின் விநியோக உரிமையை வாங்கித் தருவதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சுந்தர் பணம் பெற்று இன்று வரை பணத்தைத் திருப்பி தரவில்லை என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் சக்தி சிதம்பரம் மேல் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News