Categories: Cinema News latest news throwback stories

இளையராஜா வாழ்க்கை கதையை படமாக்கிய இயக்குனர்.! – ஆனா இளையராஜா மியூசிக் போடல!..

தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவது என்பது இப்போதைய காலக்கட்டத்தில் மிகவும் எளிய விஷயமாக உள்ளது. இன்ஸ்டாகிராம் அல்லது யூ ட்யூப் என எதன் மூலமாகவாவது பிரபலமாகிவிட்டால் அதை கொண்டே எளிதாக சினிமாவிற்குள் சென்று விட முடிகிறது.

ஆனால் ரஜினி கமல் காலக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. விஜயகாந்த், சத்யராஜ் எல்லாம் இதற்காக பெரும் பாடுப்பட்டுள்ளனர். அவர்கள் ஏறி இறங்காத ஸ்டுடியோவே கிடையாது என சத்யராஜே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அந்த வகையில் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக மிகவும் கஷ்டப்பட்டவர் இசைஞானி இளையராஜா. சாப்பாட்டுக்கே காசு இல்லாதபோதும் சென்னையில் தங்கி சினிமாவில் வாய்ப்பு பெற்றே தீர வேண்டும் என போராடியுள்ளார்.

அந்த காலக்கட்டத்தில் சாப்பிட காசு இல்லை என்பதற்காக மெரினா பீச் மாதிரியான ஏரிக்களுக்கு சென்று அங்கு துண்டை விரித்துப்போட்டு பாட்டு பாடியிருக்கிறாராம் இளையராஜா. அவருக்கு துணையாக அப்போது அவருடைய மூன்று நண்பர்கள் இருந்துள்ளனர். மூவரும் ஒரே அறையில்தான் தங்கி இருந்தனர்.

இளையராஜா கதை:

ஒருமுறை இந்த அனுபவங்களை இயக்குனர் விக்ரமனிடம் பகிர்ந்துள்ளார் இளையராஜா. அதை கேட்ட விக்ரமன் இப்படி சினிமாவில் வாய்ப்பு தேடும் இளைஞனை கதாநாயகனாக வைத்து ஒரு திரைப்படம் எடுத்தால் என்ன என யோசித்துள்ளார்.

அந்த யோசனையின் தோன்றலாக உருவான திரைப்படம்தான் முரளி நடித்த புது வசந்தம். இளையராஜாவின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு அதே போல சினிமாவில் வாய்ப்பு தேடும் ஒரு நாயகனாக முரளியை உருவாக்கியிருந்தார் விக்ரமன். இளையராஜாவிற்கு இருந்தது போலவே முரளிக்கும் அதில் 3 நண்பர்கள் இருப்பார்கள். அதே போல இவர்களும் பண கஷ்டத்தை போக்க சாலைகளில் பாடல் பாடி வருவார்கள்.

ஆனால் இளையராஜாவின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இந்த படத்திற்கு இசையமைத்தது என்னவோ எஸ்.ஏ ராஜ்குமார்தான். இளையராஜாவே இசையமைத்திருந்தால் இன்னும் செண்டிமெண்டலாக ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.

இதையும் படிங்க: இசையை பத்தி என்ன தெரியும்?-பத்திரிக்கையாளரை கண்டபடி கேட்ட இளையராஜா… அப்போவே அப்படித்தான் போல!

Published by
Rajkumar