×

துப்பாக்கி 2 டைட்டிலை தர மறுத்த தாணு…. விஜய்யுடன் மோதலா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்துக்காக துப்பாக்கி 2 பட டைட்டிலை தர மறுத்துள்ளார் கலைப்புலி தாணு
 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்துக்காக துப்பாக்கி 2 பட டைட்டிலை தர மறுத்துள்ளார் கலைப்புலி தாணு.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கும் துப்பாக்கி 2 என தலைப்பு வைகப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் துப்பாக்கி என்ற டைட்டிலின் உரிமை கலைப்புலி தாணு வசம் இருந்தது.

ஆனால் கலைப்புலி தாணு அவர்கள் அந்த டைட்டிலை தரமுடியாது என உறுதியாக சொல்லிவிட்டார் என்று சொல்லப்படுகிறது. விஜய்க்கு நெருங்கிய தயாரிப்பாளராக அறியப்பட்ட விஜய்க்கு ஏன் தாணு டைட்டிலை தர மாட்டேன் என்கிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி விசாரிக்கையில் தாணு தயாரித்த தெறி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின் மீண்டும் விஜய் தனக்கு கால்ஷீட் தருவார் என எதிர்பார்த்துள்ளார் தாணு. அப்படி விஜய் தராததால் அவர் மேல் அதிருப்தியில் இருந்துள்ளார். அதனால் தான் இப்போது துப்பாக்கி 2 டைட்டிலை தர மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News