Connect with us

Cinema News

காசு கொடுத்து அதை செய்யணும்னு அவசியம் இல்ல!.. லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் கெத்து காட்டிய இளையராஜா…

தமிழ் சினிமாவில் இசை அரசன் என பலராலும் புகழப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா. இளையராஜா இசையமைக்கும் படங்களுக்கு அப்போது சிறப்பு வரவேற்பு இருந்தது. அதுதான் அவர் தொடர்ந்து சினிமாவில் பெரும் பிரபலமாக இருப்பதற்கு காரணமாக இருந்தது.

ராஜ்கிரண் மாதிரியான பெரும் நடிகர்களே அப்போது தங்களது திரைப்படம் வெற்றி பெறுவதற்கு இளையராஜா இசையைதான் வெகுவாக நம்பி இருந்தனர். தமிழில் பெரும்பாலும் உள்ள பிரபலங்கள் சினிமாவில் யாரோ ஒருவரின் துணையில்தான் வாய்ப்பை பெற்றிருபார்கள்.

லஞ்சம் கொடுக்க மறுத்த இளையராஜா:

ஆனால் எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து எந்த ஒரு ஆதரவும் இல்லாமலே தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றவர் இளையராஜா. அதனாலேயே இளையராஜா பாமர மக்களுக்கு நெருக்கமான இசையமைப்பாளராக இருந்தார். என்னதான் ஊரை விட்டு வந்து சென்னையிலேயே தங்கிவிட்டாலும் ஊர் மீது இருந்த பாசம் இன்னும் இளையராஜாவிற்கு அகலவில்லை.

தனது ஊருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என நினைத்தார் இளையராஜா. எனவே ஊரில் கல்லூரி கட்டுவதற்காக பெரிதாக ஒரு இடத்தை வாங்கினார். ஆனால் அந்த இடத்தில் கல்லூரி கட்ட வேண்டும் என்றால் அதற்கு லஞ்சம் தர வேண்டும் என அங்கிருந்த அதிகாரி கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுத்துதான் கல்லூரி கட்ட வேண்டும் என்கிற அவசியம் இல்லை என கூறி பல வருடங்களாக அங்கு கல்லூரியே கட்டாமல் இருக்கிறாராம் இளையராஜா. பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கவுண்டமணி என் வாழ்க்கையையே நாசம் பன்ணிட்டாரு!.. ஷர்மிளி பகீர் பேட்டி…

Continue Reading

More in Cinema News

To Top