×

கள்ளக்காதலியோடு இருந்த போது வெளியே வீட்டைப் பூட்டிய நபர் … அவமானத்தில் தூக்கில் தொங்கிய நபர்!

கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று அவருடன் தனிமையில் இருக்கும்போது மக்கள் கண்டுபிடித்துவிட்டதால் 23 வயது இளைஞர் ஒருவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று அவருடன் தனிமையில் இருக்கும்போது மக்கள் கண்டுபிடித்துவிட்டதால் 23 வயது இளைஞர் ஒருவர் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர்பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து நடத்துனர் கிருஷ்ணகுமார் (23). இவர் வேலைக்கு செல்லும் பஸ்ஸில் வந்து செல்லும் 45 வயது பெண்ணோடு கிருஷ்ணகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் இருவரும் பழகி வந்துள்ளார்கள்.

இந்நிலையில் நேற்று அந்த பெண்ணின் வீட்டுக்கு கிருஷ்ணகுமார் சென்று இருவரும் தனிமையில் இருந்த போது, வீட்டுக்கு வெளியே தாழ்ப்பாலைப் போட்டு ஊரைக் கூட்டியுள்ளார் ஒருவர். இதனால் வீட்டின் முன் பொதுமக்கள் கூட அந்த பெண் வீட்டின் பின்புறம் வழியாக தப்பி ஓடிவிட்டார். ஆனால் மாட்டிக்கொண்ட அவமானம் தாங்காத கிருஷ்ணகுமாரோ அந்த வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெகுநேரம் ஆகியும் வெளியே வராததால் வீட்டை உடைத்துச் சென்று உள்ளே பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் ஆபாசமான பிறன்மனை நோக்கும் புத்தியால் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News