சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ஜெயிலர். கலாநிதி மாறன், ரஜினி, நெல்சன் என யாருமே நினைத்து பார்த்திராத வகையில் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்துள்ளது. உலகம முழுவதும் சேர்த்து இப்படம் ரூ.700 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு முன் நெல்சன் விஜயை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று சமூகவலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்த ட்ரோலில் அதிகம் சிக்கியது நெல்சன்தான்.
இதையும் படிங்க: இப்பதான் எனக்கு பணக்காரன் ஃபீலே வந்திருக்கு!.. ஜெயிலர் வெற்றி விழாவில் மனம் திறந்து பேசிய ரஜினி!..
ஆனாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனும், ரஜினியும் களம் இறங்கினர். அப்படித்தான் ஜெயிலர் படம் உருவானது. படத்தின் வெற்றிக்காக மோகன்லால், சிவ்ராஜ்குமார் மற்றும் சுனில் ஆகியோரை நெல்சன் நடிக்க வைத்தார். அதேபோல், தமன்னாவுக்கு காவாலா பாட்டை வைத்து ஹைப்பை உருவாக்கினார்.
ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் மகிழ்ச்சியடைந்த கலாநிதிமாறன் அன்பளிப்பாக ரஜினிக்கு ஒரு காசோலையை கொடுத்தார். அதேபோல், நெல்சன், அனிருத் ஆகியோருக்கும் செக் கொடுத்தார். ஆனால், அதில் எவ்வளவு பணம் இருந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. அதேபோல், அவர்கள் 3 பேருக்கும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்தார்.
இதையும் படிங்க: ஜெயிலர் படம் ஆவரேஜ்தான்!.. அத தூக்கிட்டு போனது அவர்தான்.. அட சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டாரே!…
இந்நிலையில், அந்த செக்கில் இருந்த தொகை வெளியே கசிந்துள்ளது ரஜினிக்கு ரூ.30 கோடியும், நெல்சனுக்கு ரூ.5 கோடியும், அனிருத்துக்கு ரூ.2 கோடியும் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அண்ணாத்த படம் சரியாக போகவில்லை என்பதால் ஜெயிலர் படத்திற்கு ரஜினிக்கு ரூ.80 கோடி மட்டுமே சம்பளமாக பேசப்பட்டது. அப்போது ரஜினி ரூ.100 கோடி சம்பளம் வாங்கினார். ஆனாலும் ரஜினி அதற்கு சம்மதித்தே ஜெயிலர் படத்தில் நடித்தார்.
ஆனால், ஜெயிலர் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ரூ.250 கோடிக்கும் மேல் லாபத்தை கொடுத்துள்ளதால் ரஜினி வாங்கிய பழைய சம்பளத்தை விட ரூ.10 கோடி சேர்த்து ரூ.30 கோடியை அவருக்கு கலாநிதிமாறன் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: லோகேஷ் என் ஆளு தான்!… ரஜினி எனக்கு போட்டி.. ஆனால் இது மட்டும் இல்லை… குஷியான கமல்!
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…