நடிகர் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படம் தேவைப்பட்ட போது அதை நிறைவேற்றிய படம்தான் ஜெயிலர். ரஜினியின் கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அந்த நேரத்தில்தான் பீஸ்ட் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று, அப்பட இயக்குனர் நெல்சன் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்ட போதும் துணிந்து அவருடன் கூட்டணி அமைத்தார்.
ரஜினியின் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தை மாஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதை அமைத்தார் நெல்சன். மேலும், மற்ற மாநிலங்களிலும் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மலையாளத்தில் இருந்து மோகன்லாலையும், கன்னடத்தில் இருந்து சிவ்ராஜ்குமாரையும் அள்ளி போட்டார். தெலுங்கிலிருந்து காமெடி நடிகர் சுனிலை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைத்தார்.
இதையும் படிங்க: லோகேஷ் என் ஆளு தான்!… ரஜினி எனக்கு போட்டி.. ஆனால் இது மட்டும் இல்லை… குஷியான கமல்!
மேலும், கவர்ச்சிக்கு தமன்னாவை நடிக்க வைத்தார். காவாலா பாட்டுக்கு அம்மணி குலுங்கி குலுங்கி ஆடிய ஆட்டம் இப்படத்திற்கு பெரிய புரமோஷானாக அமைந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதுவும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும், ரஜினியும் எதிர்பார்க்காத அளவுக்கு இப்படம் மாபெரும் வசூலை ஈட்டியது.
தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.700 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே, இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக கொடுத்தார்.
இதையும் படிங்க: இனிமே என் ஸ்டைலே வேற… சம்பளம் வாங்காமல் பாலசந்தருக்காக ரஜினி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம்!
அதேபோல், இப்படத்தில் பணிபுரிந்த தொழிலார்களுக்கு விருந்து கொடுத்தும் உபசரித்து தங்க காயின் ஒன்றையும் பரிசளித்தார். அதோடு, இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கேடயம் மற்றும் விருந்து கொடுத்தார். இதில், ரஜினியும் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பேசிய ரஜினி ‘ஜெயிலர் படத்தை நான் பார்த்த போது எபோவ் ஆவரேஜாகவே இருந்தது. ஆனால், அனிருத் தனது இசையால் ஒரு மேஜிக் செய்துவிட்டார். அவரின் பின்னணி இசை மூலம் படத்தை எங்கேயோ தூக்கி கொண்டு போய்விட்டார். அவரின் இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். எனக்கும், அவரின் நண்பர் நெல்சனுக்கும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம்’ என அனிருத்தை ரஜினி பாராட்டினார்.
இதையும் படிங்க: ரஜினி பால் போட்டா பேட்டை தூக்கிட்டு ஸ்டம்பை காட்ட மாட்டேன்!.. தலைவர் 171 பற்றி பேசிய கமல்!..