Categories: Cinema News latest news

தீவிர அஜித் ஃபேனா இருந்த சிம்பு அந்தர் பல்டி அடிக்க காரணம் இதுதான்!… அப்புறம்தான் எல்லாம் மாறிச்சி!…

நடிகர் சிம்பு சினிமாவுக்கு வந்த புதிதில் ரஜினி ரசிகர் என்று கூறிவந்தார். பல முறை தான் ஒரு ரஜினி ரசிகர் என்று கூறியுள்ளார். அவரின் ஸ்டைலையும் பல படங்களில் ஃபாலோ செய்திருக்கிறார். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அப்போது அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு, தான் ஒரு தீவிர அஜித் ரசிகர் என்று கூறிவந்தார். அஜித் படம் வெளியாகும் போது, வாழ்த்து கூறுவார். பல பேட்டிகளில், மேடைகளில் தனக்கு அஜித் தான் பிடிக்கும் என்று வெளிப்படையாக பலமுறை கூறியுள்ளார்.

இதையும் படிங்க- ரஜினிக்கே போன் போட்டு வாழ்த்தினாரா விஜய்?.. ஜெயிலருக்கு வாழ்த்து சொன்ன அஜித்!.. என்னங்க நடக்குது!..

ஆனால் சமீப காலமாக அவர் அஜித் ரசிகர் என்று காட்டிக்கொள்வதில்லை. ஒருவேளை அவருக்கும் அஜித்துக்கும் இடையே ஏதேனும் பிரச்சனையா என்று பலரும் கூறிவந்தனர். இதுகுறித்து வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் நடிகர் சிம்பு பலமுறை நான் ஒரு அஜித் ரசிகர் என்று கூறவந்தார். அதற்கு அஜித் தரப்பில் இருந்து எந்த பதிலும் வந்ததில்லை. ஒருமுறை அஜித் படம் வெளியான சமயத்தில், அவரிடம் அது குறித்து கேள்வி கேட்டபோது, நான் சொல்லிதான் அவரின் படம் வெற்றி பெற வேண்டும் என்று அவசியமில்லை என்று நல்ல விதமாக தான் கூறினார்.

ஆனால் அதனை அஜித் ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டு, சமூக வலைதளங்களில் மிகவும் கடுமையாக திட்டினார்கள். அதோடு, வாலு படம் வெளியாகாமல் பிரச்சனை ஏற்பட்ட போது, விஜய் சிம்புவை தொடர்புகொண்டு, ஏதேனும் உதவி வேண்டுமா என்று கேட்டு ஆறுதல் கூறினார். அப்போதிலிருந்து சிம்பு தன்னை அஜித் ரசிகராக காட்டிக்கொள்வதில்லை.

ஒருவேளை அந்த சம்பவத்திலிருந்து அவரின் மனம் மாறியிருக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு அவர் தன்னை ஒரு அஜித் ரசிகராக காட்டிக்கொள்வதில்லை என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- அந்த படத்துல நடிச்சதுதான் அஜித் எடுத்த கேவலமான முடிவு – ட்விட்டரில் காயத்ரி சரமாரி பதில்

Published by
prabhanjani