Categories: Cinema News latest news throwback stories

ஆள விடுங்க சாமி…எஸ்.ஜே சூர்யாவிடம் ட்ரிக்காக மறுத்த ஏ.ஆர் ரகுமான்!. ஆனா காரணம் வேற…

தமிழில் உள்ள பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான். தமிழில் முதன் முதலாக மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் மூலமாக இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அறிமுகமாகி சில காலங்களிலேயே தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டார் ஏ.ஆர் ரகுமான். அவருடைய இசைக்கும் பெருவாரியான ரசிக பட்டாளங்கள் உருவாகிவிட்டது. இதனால் இளையராஜாவிற்கும் ஏ.ஆர் ரகுமானுக்கும் இடையே மோதல் இருந்ததாக சில பேச்சுக்கள் அப்போதே இருந்து வந்தன.

AR Rahman

ஏனெனில் இளையராஜாவிடம் இசை கருவி வாசிப்பவராக ஏ.ஆர் ரகுமான் பணிப்புரிந்து வந்தார். பிறகு வாய்ப்பு கிடைத்தவுடன் தனியாக வந்துவிட்டார். முக்கியமாக இதுவரை இருந்த இளையராஜா இசையில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்ட இசையை ஏ.ஆர் ரகுமான் கொடுத்திருந்தார்.

ரகுமான் செய்த ட்ரிக்:

கிட்டத்தட்ட இந்த கதையை அடிப்படையாக கொண்டு எஸ்.ஜே சூர்யா எடுத்த திரைப்படம்தான் இசை. இந்த திரைப்படத்தை இயக்கும்போதே படத்திற்கு ஏ.ஆர் ரகுமான்தான் இசையமைக்க வேண்டும் என நினைத்தார் எஸ்.ஜே சூர்யா. ஆனால் ஏ.ஆர் ரகுமான் கூறும்போது ஏன் எஸ்.ஜே சூர்யா இதற்கு நீங்களே இசையமைக்கலாமே? என கேட்டுள்ளார்.

அதே போல அந்த படத்திற்கு எஸ்.ஜே சூர்யாதான் இசையமைத்தார். ஆனால் இதுக்குறித்து ரசிக வட்டாரங்கள் பேசும்போது, இது இளையராஜா, ஏ.ஆர் ரகுமானின் கதைதான், அதற்கு ஏ.ஆர் ரகுமானே இசையமைத்தால் அதனால் பிரச்சனையாகும் என்றுதான் அதை ட்ரிக்காக தவிர்த்துள்ளார் ஏ.ஆர் ரகுமான் என பேசிக்கொள்கின்றனர்.

இதையும் படிங்க:அஜித்துக்கு போட்டியா களம் இறங்குறேன்.. பைக்கோடு மாஸ் காட்டிய மஞ்சு வாரியர்!..

 

Published by
Rajkumar