Categories: Cinema News latest news

அஜித் சொன்ன வார்த்தைக்காக துணிந்து இறங்கிய விஜய்! ‘கோட்’ படத்தின் பின்னனியில் இப்படி ஒரு சம்பவமா?

Ajith Vijay:  இன்று தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இருவருமே சமகாலத்தில் சினிமாவிற்குள் நுழைந்து ஏகப்பட்ட விமர்சனங்களைக் கடந்து இன்று கோலிவுட்டில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டு வருகிறார்கள் அஜித் மற்றும் விஜய்.

தொழில் முனையில் போட்டிகள் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் இரு குடும்பங்களும் அன்பையும் பாசத்தையும் பரிமாறிக் கொண்டு தான் வருகிறார்கள். அஜித் அவருடைய படங்களில் பிசியாக இருக்கிறார். விஜய் சினிமா மற்றும் அடுத்ததாக அரசியலிலும் கவனம் செலுத்த இருக்கிறார். இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு இருந்து கொண்டு தான் வருகின்றது.

இதையும் படிங்க: வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது..! சாதித்துக் காட்டிய ஏவிஎம் படம்…

அதற்கு உதாரணமாக மங்காத்தா படபிடிப்பின் போது அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது, விஜய் குடும்பத்திலிருந்து அஜித் குடும்பத்திற்கு அவர்களுடைய உறுப்பினர்கள் செல்வது, ஏதாவது ஒரு நிகழ்ச்சி என்றால் இரு குடும்பங்களும் சந்தித்து தங்கள் சந்தோஷங்களை பரிமாறிக் கொள்வது என மறைமுகமாக இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டு தான் வருகின்றன.

இந்த நிலையில் விஜய் கோட் படத்தில் நடிப்பதற்கு காரணமே அஜித் தான் என்பதைப் போல ஒரு சம்பவத்தை இயக்குனர் மோகன் ராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். ஒரு சமயம் மோகன் ராஜாவும் விஜயும் காஷ்மீர் பயணத்தில் பிளைட்டில் சந்தித்துக் கொண்டார்களாம். அப்போது விஜய் மோகன் ராஜாவிடம்  ‘அஜித் வெங்கட் பிரபு என்னுடைய இயக்குனர். வேண்டும் என்றால் அவரை யூஸ் பண்ணிப் பாருங்களேன்’ என விஜய்யிடம் சொன்னதாக மோகன் ராஜாவிடம் விஜய் சொல்லி இருக்கிறார்.

இதையும் படிங்க: திறமை இருந்தும் கதைல கோட்ட விடுற நடிகர்கள்! ஒரு படத்துல மட்டும் பேர் எடுத்தா போதுமா?

‘அஜித் சொன்னதைப் போல உன்னையும் நான் என்னுடைய இயக்குனர் என சொல்ல வேண்டும் .அந்த அளவுக்கு ஸ்கிரிப்ட் எழுதிவை’ என மோகன் ராஜாவிடம் விஜய் சொன்னாராம். இதிலிருந்து தான் தெரிகிறது அன்று அஜித் சொன்னதின் பெயரில் தான் கோட் படத்தில் விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்திருப்பாரோ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் வெங்கட் பிரபு. அந்த சமயத்திலேயே விஜயும் அஜித்தும் சந்தித்துக் கொண்டு பேசினர். அஜித் சொன்ன ஒரு வார்த்தைக்காக இவ்வளவு வருடங்கள் கழித்து வெங்கட் பிரபுவுடன் இணைந்திருக்கிறார் விஜய் என கோடம்பாக்கத்தில் இந்த செய்தி வைரலாகி வருகின்றது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini