×

தமிழ் சினிமா வரலாற்றில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்த பாடல் !

இயக்குனர் வசந்தின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் 
 
dsfa

பிரபல இயக்குனர் வசந்த்தின் படங்கள் பெரும்பாலானவை ஹிட் தான். தமிழ் ரசிகர்கள் இவரது படங்களுக்கு பெரிதும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். காரணம் குடும்பப்பாங்கான ஆபாசமில்லாத இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத படம் தான் இவரது படங்கள் என்ற முத்திரையைப் பதித்துள்ளன.

இதன் காரணமாக தாய்க்குலங்கள் பெரிதும் விரும்பிப் பார்க்கின்றனர். எந்தத் திரைப்படத்திற்கு பெண்கள் கூட்டம் அமோகமாக வருகிறதோ அந்தப் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்பதில் எந்;தவித ஐயமும் இல்லை.

sfafs

பூவெல்லாம் கேட்டுப்பார், அப்பு, ரிதம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, சத்தம் போடாதே, மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். நினைத்தது யாரோ, வை ராஜா வை ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். 

தேவகோட்டையில் பிறந்த வசந்தின் இயற்பெயர் சோம.சின்ன வீரப்பன். மற்ற பெயர்கள் வசந்த் எஸ்.சாய். ரேணுகாவை மணம்புரிந்தார். 

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக 18 படங்களில் பணியாற்றியுள்ளார். அவற்றில் புன்னகை மன்னன், சிந்து பைரவி குறிப்பிடத்தக்கவை. இவர் இயக்கிய படங்களில் முதல் படமே மெஹா ஹிட். அதுதான் கேளடி கண்மணி. 

இவர் இயக்கிய படங்களில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். 

கேளடி கண்மணி 

kee

1990ல் வெளியான இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கதாநாயகனாக நடித்து இருப்பார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 285 நாள்களுக்கு மேலாக ஓடி சாதனை படைத்தது. படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜா. பாடல்கள் அனைத்தும் மெஹா ஹிட்.  

இப்படத்தில் ராதிகா, ரமேஷ் அரவிந்த், ஜனகராஜ, கீதா, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். என்ன பாடுவது, கற்பூர பொம்மை, மண்ணில் இந்த காதலன்றி, நீ பாதி நான் பாதி, தண்ணியிலே நெனஞ்சா, தென்றல் தான், வாரணம் ஆயிரம் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடிய பாடல் மண்ணில் இந்த காதலன்றி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

நீ பாதி நான் பாதி 

நிவேதா என்ற ஒற்றை வார்த்தையில் உருவான பாடல் தமிழ்சினிமா வரலாற்றிலேயே புதிய பரிமாணத்தைக் கொண்டு வந்தது. 

வசந்தின் 2வது படம்.  1991ல் வெளியானது. ரகுமான், கௌதமி, ஜெய்சங்கர், மனோரமா, ஜனகராஜ், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தர். மரகதமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் செம மாஸ் ரகங்கள். புதிய பூக்களை பார்த்து, யாரை கேட்டு, பாட்டு பாட்டு, தேவன் தீர்ப்பென்றும், பொண்டாட்டி கூப்பிடும்போது, காலம் உள்ளவரை நீ பாதி நான் பாதி, நிவேதா ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.  

ஆசை 

வசந்தின் 3வது படைப்பு என்று பார்த்தால் மிகவும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படம். அது தான் ஆசை. 1995ல் வெளியானது. அஜீத் குமாரை வெளி உலகிற்கு காட்டிய படம். வணிகரீதியிலான மாற்றத்தையும் அவருக்கு தந்தது. முன்னணி கதாநாயகன் அந்தஸ்துக்கு அவரை தூக்கி விட்டது.

சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருது வசந்திற்கும், சிறந்த அறிமுக நடிகைக்கான விருது சுவலட்சுமிக்கும் தமிழக அரசால் வழங்கப்பட்டது. தேவாவின் தெவிட்டாத இசையில் பாடல்கள் அனைத்தும் முத்தானவை.

அஜீத்குமாருடன், பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, ரோகிணி, பூர்ணம் விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரகாஷ்ராஜ் வித்தியாசமான வில்லனாகத் தோன்றுவார். கொஞ்சநாள் போறு தலைவா, மீனம்மா அதிகாலையிலும், ஷாக்கடிக்குது சோனா, புல்வெளி புல்வெளி, திலோத்தமா ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 

நேருக்கு நேர் 

nn

1997; வெளியான இப்படத்தைத் தயாரித்தவர் இயக்குனர் மணிரத்னம். இப்படத்தில் விஜய்க்கு இணையான கதாநாயகனாக சூர்யா நடித்திருப்பார். இப்படத்தில் தான் சூர்யா அறிமுகம். சிம்ரன் கதாநாயகி ஆனார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். கௌசல்யா இப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளார். ரகுவரன், ஷாந்தி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை அமைப்பாளர் தேவா. பாடல்கள் தெவிட்டாதவை. எங்கெங்கே, எவர் கண்டார், அகிலா அகிலா, அவள் வருவாளா, மனம் விரும்புதே ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News