×

வெள்ளை ஓட்டகச்சிவிங்கி என்ற இனமே அழியப்போகிறது – வேட்டைக்காரர்கள் செய்த கொடூரம் !

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் காணப்பட்ட மிகவும் அரிதான வெள்ளை ஒட்டகச்சிவிங்கி என்ற இனத்தின் தாய் ஒன்றும் குட்டி ஒன்றும் வேட்டையாடப்பட்டுள்ளது.

 

உலக அளவில் ஒட்டகச்சிவிங்கியே மிகவும் அரிதான விலங்காக மாறியுள்ளது. அதிலும் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனங்கள் கென்யா நாட்டில் மட்டுமே இருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அந்த இன ஒட்டகச்சிவிங்கிகளின் தாய் ஒன்றும் குட்டி ஒன்றும் வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டு விட்டதாக அன்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு இதை உறுதி செய்துள்ளது. மேலும் தற்போது வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனத்தில் ஒரே ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே இருப்பதாகவும் அதனைப் பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News