Categories: Cinema News latest news

வாய்ப்பு இல்லை.. அதனால் எந்த லெவலுக்கும் போவேன்… சின்ன நயன்தாராவின் சீக்ரெட் முடிவு.!

மாடல் அழகியான வாணி போஜன் சின்ன திரையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவருக்கு ‘தெய்வமகள்’ சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் கிடைக்க, அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டாலும் அண்மை காலமாக அவருக்கு இரட்டை கதாநாயகிகள் நடிக்கும் பட வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து.

அந்த வகையில், சியான் விக்ரம் நடித்த ‘மகான்’ படத்தில் இரு கதாநாயகிகள் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால், அந்த படத்தின் நீளம் காரணமாக அவர் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டது. இதன்பின், இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் கவர்ச்சியில் இறங்க முடிவெடுத்துள்ளாராம்.

பெரும்பாலும், வெள்ளி திரை நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லையென்றால் சின்ன திரை நோக்கி செல்வது வழக்கம், அதற்கு எதிர்மறையாக சின்னத்திரையில் தனது நடிப்பை தொடங்கி வெள்ளி திரைக்கு வந்த வாணி போஜன் சின்ன திரையில் குடும்ப பெண்ணாக நடிப்பதுபோல் நடித்ததால் இப்பொது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்களேன்  – அந்த சிறப்பான சம்பவத்துக்கு ஹீரோ சந்தானம் ஓகே சொல்வாரா.?! ஏக்கத்துடன் ரசிகர்கள்…

இதனை, உணர்ந்த நடிகை வாணி போஜன் கவர்ச்சியில் களமிறங்க முடிவு செய்துள்ளதாகவும் எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருப்பதாகவும் சமீபத்திய ஓர் நேர்காணலில் தெரிவித்துள்ளார். இவர், கவர்ச்சியில் நடிக்க ஓகே சொன்னாலும் அவருக்குனு பட வாய்ப்புகள் கிடைக்குமா, இல்லையா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Manikandan
Published by
Manikandan