Categories: Cinema News latest news

ஒன்னு நீ முன்ன வா.. இல்ல என்ன விடு! ரிலீஸ் தேதியில் ஆடுபுலி ஆடும் ‘ராயன்’ மற்றும் ‘இந்தியன் 2’

Rayan Movie: கோலிவுட்டில் சமீப காலமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் வருத்தமாகவே இருக்கிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக காத்துக் கொண்டிருக்கும் இந்தியன் 2, ராயன், விடாமுயற்சி, கோட், வேட்டையன் போன்ற மிகப்பெரிய ஸ்டார்களின் படங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியன் 2 மற்றும் ராயன் போன்ற படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தியன் 2 திரைப்படத்தை ஜூன் 13ஆம் தேதி ரிலீசுக்கு கொண்டுவர இருந்த நிலையில் இன்னும் அந்த படத்தின் பின்னணி பணிகள் முடிவடைய இன்னும் காலதாமதம் ஆவதால் அந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை மாதம் 18ம் தேதிக்கு தள்ளிப் போவதாக கூறப்பட்டது.

இதையும் படிங்க:போத்திக்கிட்டு நடிச்சாலும் என்ன அப்படித்தான் பாத்தாங்க! எமோஷனலான விசித்ரா

ஆனால் அன்றைய தேதியில் ராயன் படத்தை ரிலீசுக்கு கொண்டுவர இருந்தனர். இந்தியன் 2 இப்போது ஜூலை மாதத்தில் தள்ளிப் போய் இருப்பதால் ராயன் படத்தை ஜூன் 13ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கோலிவுட்டின் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ்  தனுஷின் ராயன் திரைப்படம் தான் என்று செய்திகள் கூறப்படுகின்றன.

ராயன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் தனுஷே நடித்து இயக்கி இருக்கும் படம்தான் இது. அவருக்கு 50 வது படமாகும். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்திப் கிஷன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரித்து உள்ளது.

இதையும் படிங்க: நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… பாக்கியலட்சுமியால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini