×

இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் - வலுக்கும் எதிர்ப்பு

 

சமீபத்தில் இந்து பெண்கள் பற்றி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இழிவாக பேசிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர்.  

இந்து தர்மப்படி பெண்கள் அடிப்படையில் வேசிகளாக படைக்கப்பட்டவர்கள். அவர்கள் எப்போதும் ஆண்களுக்கு கீழானவர்கள் என அவர் பேசியிருந்தார்.

எனவே, மதநல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் அவர் பேசியதால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பலரும் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர். அதேபோல், அவரின் கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் எனவும், அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பலரும் கூறி வருகின்றனர். அவருக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களையும் துவங்கியுள்ளனர்.

நான் முதல்வரானால் மதுக்கடைகளை மூடுவேன் என கூறிய திருமாவளவன் பெண்களை பற்றி இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி அவர்களின் வெறுப்புக்கு அவர் ஆளாகிவிட்டார் என்றே கூற வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News