×

பிக்பாஸ் வீட்டில் சர்ப்பரைஸ் எண்ட்ரி கொடுக்கும் பிரபலம் இவர்தான்..

 

பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் தற்போது துவங்கியுள்ளது. இதில், ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அடுத்த போட்டியாளராக பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா செல்லவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்கள் பட்டியலில் அர்ச்சனா ஏற்கனவே இருந்தார். ஆனால், பிக்பாஸ் போட்டியில் பங்கு பெறக்கூடாது என அவர் பணிபுரிந்து வரும் தொலைக்காட்சி நிறுவனம் கூறிவிட்டதால் அவரால் செல்ல முடியவில்லை.

archana

தற்போது அதில் சுமூக முடிவு எட்டப்பட்டுவிட்டதால் விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டில் எண்டிரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News