Categories: Cinema News latest news

விஜயகாந்துக்கு நியாபகம் அப்போ தான் மிஸ் ஆச்சு… நானே வேண்டாம் என்றேன்… உண்மை சொன்ன பிரபலம்!

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு இருந்த கிரேஸ் நிச்சயமாக வேறு ஒரு நடிகருக்கு இருக்குமா என்றால் சந்தேகம் தான். அப்படி இருந்த விஜயகாந்த் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்னையால் கஷ்டப்பட்டதை பார்த்து பிரபலங்கள் கண்ணீர் வடித்தனர்.

அவரின் நெருங்கிய நண்பர்களாக வாகை சந்திரசேகர், ராதா ரவி ஆகியோர் கொடுத்த பேட்டிகளில் அவர்கள் விஜயகாந்துக்கு உருகியதை பார்க்கும் போதே ரசிகர்கள் கண்ணீர் வடித்தனர். அப்படி ஒரு நட்பு, இதில் விஜயகாந்த் குறித்த பேட்டிகளில் தங்களை பார்க்க விடுவதில்லை என ராதாரவி சொல்லி இருப்பார்.

இதையும் படிங்க… கொலைமிரட்டல் விட்ட தயாரிப்பாளர்.. பயந்து கண்ணீர்விட்ட நடிகர்… கேப்டன் செஞ்ச தரமான சம்பவம்..

கடைசியாக அவரின் இறப்பில் சந்தித்த போது தான் பிரேமலதா ஒரு உண்மையை சொன்னாராம். நான் காட்டலைனு தான நீங்க சொல்லிட்டே இருப்பீங்க. அதான் கடைசியா உங்களை பார்க்க வரச் சொல்வதுக்கு போன் போட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த காலை ராதாரவி எடுக்காமல் மிஸ் செய்து விட்டாராம். அந்த போனை எடுத்து இருந்தால் அவனை கடைசியாக உயிரோடு பார்த்து இருப்பேன்.

நான் டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிட்டேன். 2018ம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். அப்போது நேரில் ஓட்டு கேட்க போனேன். என்னை சந்தித்து நல்லா இருக்கியா? அண்ணி எப்படி இருக்காங்க என விசாரித்தார். சில நொடிகளில் அருகில் இருப்பவரிடம் யார் வந்து இருக்காங்க என்றார்.

இதையும் படிங்க… இந்தியன் 2 படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இவ்வளவு கோடி செலவா? லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்…

அப்போ தான் அவன் நியாபகம் மிஸ் ஆக தொடங்கியது. நானே அவனிடம் நீ எங்கும் வர வேண்டாம். உன் ஆசீர்வாதம் இருந்தாலே ஜெயிச்சிடுவேன் எனச் சொல்லிவிட்டு வந்தாராம். அதன் பின்னர் அவரை நேரில் சந்தித்தது அவருக்கு அஞ்சலி செலுத்துவதுக்கே என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Shamily