">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
காளைய அடக்கும் சூர்யாவை அடக்கப்போவது இவர்தான்… வாடிவாசல் கதாநாயகி இவர்தான்!
வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரபல நடிகை ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
வெற்றிமாறன் தனது அடுத்த படமாக வாடிவாசலை இயக்க உள்ளார். சூர்யா நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார். மேலும் வெற்றிமாறனின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் என்ற பெயரில் சி சு செல்லப்பா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை உருவாக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போவது இதுவரை யார் என்று அறிவிக்கப்படவில்லை. இப்போது கதாநாயகியாக நடிக்க ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம் வெற்றிமாறன். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.