தளபதி 68 படத்தில் ஜோதிகா நடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் எல்லாம் கோலிவுட்டில் காட்டுத் தீயாக பரவிய நிலையில், திடீரென அவர் இந்த படத்தில் நடிக்கவே போவதில்லை என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா ஏற்கனவே விஜய்யின் குஷி மற்றும் திருமலை உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: ரஜினிக்கு கொடுத்த BMW காரை விடுங்க!.. மாவீரன் நடிகை சொந்தமா உழைச்சு வாங்குன காரை பாருங்க!..
ஆனால், இது எப்படி சாத்தியமாகும் நடிகர் சூர்யா சம்மதிக்கவே மாட்டாரே என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், சூர்யாவுக்கு ஜோதிகா விஜய்யுடன் நடிப்பதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்றும் ஜோதிகா தான் இந்த படத்தை நிராகரித்து விட்டார் எனக் கூறப்படுகிறது.
தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் யங் லுக் மற்றும் வயதான அப்பா ரோல் என இரு வேடங்களில் நடிக்க உள்ள நிலையில், அப்பா ரோலுக்கு வயதான கெட்டப்பில் விஜய்க்கு மனைவியாக கிழவி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதால் தான் ஜோதிகா இந்த படத்தின் வாய்ப்பை வேண்டாம் எனக் கூறி விட்டாராம்.
இதையும் படிங்க: அடக்க ஒடுக்கம்லாம் சீரியல்ல மட்டும்தான்!.. கப்பு வச்சி மறச்சி அதிரவிட்ட காவ்யா….
இப்போதான் உடல் எடையை எல்லாம் கடுமையாக வொர்க்கவுட் செய்து கொடுத்துள்ளேன். மீண்டும் இந்த படத்துக்காக வயதான லுக்கிற்காக வெயிட் எல்லாம் போட முடியாது என்பதால், வேறு யாரையாவது பார்த்துக்கோங்க என இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு நோ சொல்லி விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சிம்ரன், சினேகா என தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாக சீனியர் நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். எப்படி இருந்தாலும், தளபதி 68 படத்தின் பூஜையின் போது விஜய்க்கு யார் ஜோடி என்பது தெளிவாகி விடும் என்பது உறுதி.
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…