Categories: Cinema News latest news

இவங்களாம் ரிஜக்ட் பண்ண கதையா? திடீரென வெளியான சூர்யா 44 அப்டேட்.. இத்தனை விஷயம் இருக்கா?

Actor Surya: ஒரு பக்கம் விஜய் அஜித் என கொண்டாடி வரும் நிலையில் சத்தமே இல்லாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வேலைகளில் கவனமாக இருந்துவருகிறார் சூர்யா. ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற மாபெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படத்தில் நடித்த சூர்யா அடுத்ததாக பாலிவுட்டிலும் ஹீரோவாக களமிறங்க காத்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு இடையில் சுதா கொங்கரா இயக்கத்தில் புற நானூறு என்ற படத்தில் கமிட் ஆனார். இந்தப் படம் 1965 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை நிகழ்வினை அடிப்படையாக வைத்து தயாராகும் படம். அதாவது அரசியல் ரீதியாக இந்தி எதிர்ப்ப்பு போராட்டம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விளக்கும் படமாக இந்த புற நானூறு திரைப்படம் அமையும் என்று சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: கண்டக்டர் வேலையே போதும்… நடிப்பை விட்டு பெங்களூர் திரும்பிய ரஜினிகாந்த்… காத்திருந்த அதிர்ச்சி…

ஆனால் இந்தப் படத்தை எடுப்பதற்கு சில காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் இதை அப்படியே கிடப்பில் போட்டிருக்கிறார்கள். அதனால் நேற்று திடீரென அதிரி புதிரியாக வெளியானது சூர்யா 44 படத்தின் அப்டேட். இந்தப் படத்தை கார்த்திக் சுப்பாராஜ்தான் இயக்கப் போகிறாராம்.

அதெப்படி கார்த்திக் சுப்பாராஜ் இந்தக் கதையில் அதுவும் சூர்யாவை வைத்து எடுக்கப் போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. உண்மையிலேயே மாநாடு படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பாராஜ் சிம்புவை வைத்துதான் ஒரு படம் எடுக்க வேண்டும் என நினைத்தாராம். அவரிடம் கதை எல்லாம் சொல்லி ப்ராசஸிங்கில்தான் இருந்ததாம்.

இதையும் படிங்க:அவர் சகவாசமே வேணாம்.. ஒரு போட்டோ எடுக்க ஆசைப்பட்டது தப்பா? நடிகரை அவமானப்படுத்திய அஜித்..

ஆனால் ஏதோ சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டதாம். அடுத்ததாக தளபதி 69 படத்திற்காக ஒன் லைன் கதையை விஜயிடம் சொல்லியிருக்கிறார் கார்த்திக் சுப்பாராஜ். ஆனால் விஜய் இதை அப்படியே தள்ளி வைத்திருந்தாராம். அதனால் சிம்பு மற்றும் விஜயிடம் சொன்ன கதைதான் இந்த சூர்யா 44 என பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு கூறினார். ஆனால் சூர்யாவுக்கு ஏற்ற மாதிரி சில பல மாறுதல்களை செய்திருப்பார் என்றும் செய்யாறு பாலு கூறினார்.

Published by
Rohini