Categories: Cinema News latest news

தளபதி 69 ஏன் கடைசி படம்?.. விஜயின் மைண்ட்டில் ஓடுவது இதுதானாம்!.. அடங்கோ!..

Goat Movie: விஜய் நடிக்க இருக்கும் கடைசி படமான தளபதி69ஐ லாக் செய்த முக்கிய காரணமே இதான். இந்த ஒரு விஷயத்துக்காக தான் விஜய் அந்த படத்தினை தன்னுடைய கடைசி படமாக மாற்றி இருக்கிறார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் பெரிய தொகையில் சம்பளம் வாங்கி வரும் விஜய் திடீரென அரசியல் கட்சியை அறிவித்தார். அப்பொழுது அவர் நடிப்பில் உருவாகி வரும் ஒரே திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இதையும் படிங்க: குழப்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் விஜய்! தளபதி 69 அவ்ளோதானா?

ஆனால் இந்த படத்தை கடைசி திரைப்படமாக முடிவு செய்யாமல், தளபதி 69 திரைப்படத்தை தன்னுடைய கடைசி திரைப்படமாக விஜய் முடிவு செய்திருப்பதற்குப் பின்னரும் ஒரு ஆச்சரிய தகவல் இருப்பதாக பிரபல விமர்சகர் அந்தணன் தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சியின் அறிக்கையை வெளியிட்ட போதே தான் ஒப்புக்கொண்ட சில படங்களை முடித்துவிட்டு முழுவதும் அரசியலில் ஈடுபடுவேன் என்பதையும் தெரிவித்து இருந்தார்.

அந்த சமயத்தில் தளபதி 69 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் மட்டுமே முடிவாகி இருந்தது. பல இயக்குனர்கள் பேச்சுவார்த்தையில் இருந்தனர். வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ், த்ரிவிக்ரம்,  ஆர் ஜி பாலாஜி,  ஹெச். வினோத் உள்ளிட்டோரிடம் விஜய் கதை கேட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது தன்னுடைய 69 ஆவது படத்தை இயக்க ஹெச். வினோத்தை தான்  90% விஜய் உறுதி செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: புறநானூறுக்கு வச்சாச்சு ஃபுல் ஸ்டாப்! கோலிவுட்டுக்கு டாட்டா.. வெளியான சூர்யாவின் உண்மையான முகம்

பொதுவாகவே வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் ஒரு அரசியலை சொல்வதாகவே அமைக்கப்பட்டிருக்கும். அதுபோல தளபதி 69 திரைப்படமும் அரசியல் சார்ந்த திரைப்படமாகவே அமையும் எனவும் கூறப்படுகிறது.

தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்கு முன்னர் இப்படி ஒரு படத்தை எடுத்தால் அது தன்னுடைய இமேஜை பெரிய அளவில் உயர்த்தும் என்பதற்காகவே விஜய் தளபதி 69 தன்னுடைய கடைசி திரைப்படமாக முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily