Categories: Cinema News latest news

சத்தமில்லாத எண்ட்ரி… இந்த வார ஓடிடி ரிலீஸில் இத்தனை படங்களா? சுவாரஸ்ய அப்டேட்…

OTT Release: தமிழ் சினிமாவின் திரையரங்க ரிலீஸுக்கு காத்திருப்பது மாறி தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தான் ரசிகர்கள் அதிக ஆர்வமாகி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

படம் தியேட்டரில் ரிலீஸாகி 40 நாட்களையாவது தாண்டிய பின்னரே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என பலநாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. அந்த கோரிக்கையினை முறையாக ஃபாலோ செய்த முதல் படமாகி இருக்கிறது ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம்.

இதையும் படிங்க: விஜய்க்கு அவர் நோ சொல்லி இருக்கவே மாட்டார்… அதான் இதை செய்தோம்.. சீக்ரெட் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!…

அந்தோணி பாக்கியராஜ் எழுதி இயக்கிய திரைப்படம் சைரன். சுஜாதா விஜயகுமார் தயாரித்த இப்படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு பாடல்களை ஜிவி பிரகாஷ் இசையமைக்க பின்னணி இசையை சாம் சி.எஸ் இசையமைத்து இருந்தார். 

இப்படத்தினை பிப்ரவரி 16 தேதி படக்குழு ரிலீஸ் செய்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் சுமார் வரவேற்பை தான் பெற்றது. இந்நிலையில் இப்படம் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்கு மேலாகியே ஓடிடிக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: பாக்கியா வீட்ல விசேஷங்க… இப்டியா காப்பி அடிப்பீங்க… ஈஸ்வரி என்ன சொல்லுவாங்களோ!

வைபவ், நந்திதா, தன்யா ஹோப் ஆகியோர் நடிப்பில் வெளியான ரணம் திரைப்படம் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை ரிலீஸாக இருக்கிறது. இதை தவிர நிறைய படங்கள் ரிலீஸானாலும் அது அனைத்துமே மற்ற மொழிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily