Categories: Bigg Boss latest news

என்னடா ஜோடி மாத்தி வெளியே அனுப்புறீங்க!.. இந்த வாரமும் டபுள் எவிக்‌ஷன்.. பரிதாப நிலையில் பிக் பாஸ்!

இந்த வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்‌ஷன் தான் என ஷூட்டிங் முடிந்ததும் தகவல் கசிந்து விட்டன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனில் ஏகப்பட்ட டபுள் எவிக்‌ஷன்களும் 5 பேர், 2 பேர் என கும்பல் கும்பலாக வைல்டு கார்டு என்ட்ரியும் வெளி ஆட்கள் கிடைக்காத நிலையில், எவிக்ட் ஆனவர்களுக்கே மீண்டும் சான்ஸ் என மொக்கைப் போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வாரமும் பிக் பாஸ் வீட்டை ஒரு வழியாக காலி செய்த அந்த இரண்டு பிரபலங்கள் பற்றிய தகவல் வெளியானதும் என்னடா ஜோடி மாத்தி எவிக்ட் பண்ணிட்டீங்களே இனிமேல் தனியாக இருக்கும் இருவரும் ஜோடியாகிடப் போறாங்க என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த நிவாரணப் பொருளை வாங்காமல் சென்ற சிறுவன்!.. துரத்திக் கொண்டு ஓடிய புஸ்ஸி ஆனந்த்!..

கடந்த வாரம் முழுவதும் பூர்ணிமாவை பிழிந்து எடுத்த காஜி நிக்சன் தான் எவிக்ட் ஆனதில் ஒரு போட்டியாளர் என்றும் அவரது பிரிவால் பூர்ணிமா பைத்தியம் பிடித்தவர் போல ஆகாமல் இருந்தால் சரி என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அதே போல மணியுடன் ஒட்டி உரசி அவருடைய கேமையே ஸ்பாயில் பண்ணிக் கொண்டிருந்த ரவீனாவும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக கூறுகின்றனர்.

இதையும் படிங்க:  பல அவமானங்களைக் கண்ட விஜயகாந்துக்கு மருந்தாக வந்த வாய்ப்பு… கிடைத்தது எப்படின்னு தெரியுமா?

ஆனால், இந்த வாரம் மாயா எவிக்ட் ஆகாமல் எஸ்கேப் ஆனது தான் ரசிகர்களுக்கு ரொம்பவே வருத்தமாக உள்ளது. அவருக்குத்தான் விஜய் டிவியும் கமலும் டைட்டிலை கொடுக்க உள்ளனர் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

Saranya M
Published by
Saranya M