பல அவமானங்களை கண்ட விஜயகாந்துக்கு மருந்தாக வந்த வாய்ப்பு... கிடைத்தது எப்படின்னு தெரியுமா?

by sankaran v |   ( Updated:2023-12-30 15:18:33  )
பல அவமானங்களை கண்ட விஜயகாந்துக்கு மருந்தாக வந்த வாய்ப்பு... கிடைத்தது எப்படின்னு தெரியுமா?
X

VK112

சினிமா கனவுகளோடு விஜயகாந்த் மதுரையில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார். அங்கு பாண்டி பஜார் ரோகினி லாட்ஜ்ல 20ம் நம்பர் ரூமில் தான் தங்கினாராம். சினிமா கனவுகளை சுமந்து வரும் பலரும் அங்கு தான் தங்குவார்களாம். ஆர்.சுந்தரராஜன், பாக்யராஜ் எல்லாரும் அங்கு தான் தங்கி இருந்தாங்களாம்.

இதையும் படிங்க: இததான் எதிர்பார்த்தோம்! ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பில் இருந்து வெளியான அஜித் – த்ரிஷா ஸ்டில்

எம்.ஏ.காஜாவோட இனிக்கும் இளமை படம் தான் கேப்டனின் முதல் படம். அப்ப ஏற்கனவே விஜயராஜ்னு ஒரு நடிகர் இருந்ததால விஜயகாந்த்னு பேரை வச்சாராம் இயக்குனர்.

அந்தப் படத்துல கிடைச்ச கொஞ்ச பேரை வச்சி பல இடங்களில் விஜயகாந்த் வாய்ப்பு தேடினாராம். அதான் ஏற்கனவே ரஜினிகாந்த் இருக்காருல்ல. எங்களுக்கு எதுக்கு இன்னொரு காந்த்னு கிண்டல் பண்ணுவார்களாம். அதை எல்லாம் மனதில் தாங்கிக் கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து முன்னேறினார் கேப்டன். பின்னாளில் யார் யாரெல்லாம் விஜயகாந்தைக் கிண்டல் செய்தார்களோ, அவர்களே கால்ஷீட்டுக்காக விஜயகாந்திடம் வந்து காத்து கிடந்தார்களாம்.

SOI

SOI

அகல்விளக்கு படத்தின் போதும் கேப்டனுக்கு ஒரு அவமானம் வந்தது. ரொம்ப பசியோடு மதிய உணவு நேரத்தில் கேப்டன் இருந்தாராம். அதுவரைக்கும் ஷோபா வரலையாம். கேப்டனும் பசி பொறுக்காம சாப்பிட உட்கார்ந்து விட்டாராம். அந்த நேரம் பார்த்து ஷோபாவும் வந்துவிட விஜயகாந்தை சாப்பிட விடாம எழுப்பி விட்டாங்களாம். அந்த நிமஷம் கேப்டன் கண்கலங்கி விட்டாராம்.

இதையும் படிங்க... தான தருமங்கள் செய்த கேப்டனுக்கு கடைசி காலத்தில் இவ்ளோ கஷ்டங்களும் வந்தது ஏன்னு தெரியுமா?

சட்டம் ஒரு இருட்டறை படம். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் . அப்போ ஒரு தலை ராகம் படம் நல்லா ஓடிய நேரம். அதில் நடிச்ச ஒரு நடிகர் இந்தப் படத்தில் ஹீரோவாக இயக்குனரிடம் பிரஷர் கொடுத்தாராம். ஆனால், அவரோ விஜயகாந்தைப் புக் பண்ணிவிட்டார். பிரஷர் செய்த ஹீரோவிடம், நான் தான் தயாரிப்பாளர் சிதம்பரம். என்னோட படத்துல ஒரு தமிழன் தான் ஹீரோவா நடிக்கணும்னு கறாரா சொல்லிவிட்டாராம். படம் ரிலீஸ் ஆகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

மேற்கண்ட தகவலை விஜயகாந்தே ஒருமுறை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story