×

டாக்டர் அப்டேட் கொடுத்த கலெக்டர்.. புரோ நீங்க வேற லெவல்!....

திருப்பூர் கலெக்டர் சொல்லும் சில சமூக கருத்துக்கள் செம வைரலாகி வருகிறது.
 
 
டாக்டர் அப்டேட் கொடுத்த கலெக்டர்.. புரோ நீங்க வேற லெவல்!....

சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் சொன்னாலும் அதை சொல்லும் ஸ்டைலில் சொன்னால் தான் மக்களிடம் ரீச் கிடைக்கும். அதுவும் பிரபலங்களை வைத்து சொன்னால் கண்டிப்பாக அது வைரல் தான். இந்த டெக்னிக்கை தான் தற்போது திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன் கையாண்டு வருகிறார். 

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒரு குடிமகனாக தேர்தலில் வாக்கும் அளிக்கும் வேண்டும் என்பதை செம ஸ்டைலாக ஒரு ட்வீட்டை தட்டி இருந்தார். அந்த ட்வீட்டில், மாஸ்க் அணிந்து டாக்டர் சிவகார்த்திகேயன் நிற்கும் போஸ்டரில் தவறாமல் வாக்களிக்க வாருங்கள் என்ற புகைப்படத்தை பகிர்ந்து அதில் இதோ #Doctor அப்டேட் மக்களே,  எனக் குறிப்பிட்டு இருந்தார்.


இதை பார்த்த சிவகார்த்திகேயன் 'பிரதர் நீங்க வேற லெவல்.  நல்ல முன்னெடுப்பு இது. நானும் உங்களுடன் இருக்கிறேன். வாக்களிக்கச் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என பதில் ட்வீட் தட்டினார்.


அந்த ட்வீட் ரீ ட்வீட் செய்த கலெக்டர் விஜயகார்த்திகேயன் மிக்க நன்றி சிவகார்த்திகேயன் பிரதர். அது தான் #Doctorரே சொல்லீட்டாரே. மாஸ்க் அணிந்த வாக்களிக்க செல்லுங்கள் எனக் குறிப்பிட்டார். இவர்கள் இந்த சுவாரஸ்சியமான உரையாடல் தற்போது இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்மையில் வலிமை அப்டேட் என பகிர்ந்து, அதில் ஜனநாயகத்தின் வலிமை நம் ஒவ்வொருவரின் வாக்கு தான். சட்டமன்ற தேர்தலில் வாக்களியுங்கள் என ட்வீட் தட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News