Categories: Cinema News latest news

நாளைக்காவது கல்லா கட்டுதானு பாப்போம்! ஒரே நாளில் ரிலீஸாகும் 4 படங்கள்.. யாரு கிங்குனு தெரியலயே

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் என்பது அரிதாகவே பார்க்கப்படுகிறது. சின்ன சின்ன படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகி குறைந்த அளவு லாபத்தையே திரையரங்கு உரிமையாளர்கள் பார்த்து வருகிறார்கள். இனி  வரும் காலங்களில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் ஒவ்வொன்றாக ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கடைசியாக அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி இந்த வருடத்தின் முதல் அதிக லாபத்தை பார்த்த படமாக இந்த அரண்மனை 4 திரைப்படம் தான் அமைந்தது. அதுவரைக்கும் எந்த ஒரு படமும் அதிக லாபத்தை பார்த்த படமாக அமையவில்லை என்பதுதான் சோகம். அதற்கு அடுத்தபடியாக வெளியான ஸ்டார் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: சம்பளம் என்னவோ கம்மி தான். ஆனா கண்ணை கட்ட வைக்கும் ராம்சரணின் சொத்து மதிப்பு!

அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் நாளை ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றன. அதில் செல்வம் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிப்பில் தயாரான  ‘படிக்காத பக்கங்கள்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. திரில்லர் கதையில் அமைந்த இந்த திரைப்படம் யாஷிகாவுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அதேபோல் நடிகர் ரஞ்சித் இயக்கத்தில் தயாரான திரைப்படம்  ‘கன்னி’ அந்தப் படமும் நாளைக்கு தான் ரிலீஸ் ஆக உள்ளன. இது சமூக கருத்தை ஆழமாக சொல்லும் ஒரு முக்கியமான திரைப்படமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக உறியடி விஜயகுமார் நடித்த  ‘எலக்சன்’ திரைப்படமும் நாளைக்கு தான் ரிலீஸ் ஆக உள்ளன.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவிலேயே நான்தான் ஃபர்ஸ்ட்! சுந்தர் சி சொன்ன அந்த மேட்டர் என்ன தெரியுமா?

இந்த படங்களோடு சேர்ந்து அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சந்தானம் நடித்த  ‘இங்கு நான் தான் கிங்’ என்ற திரைப்படமும் நாளை ரிலீஸ் ஆக உள்ளன. இந்த நான்கு திரைப்படங்களில் சந்தானம் திரைப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஏனெனில் வித்தியாசமான கதையில் அவ்வப்போது சந்தானத்தின் படம் ரிலீஸ் ஆகி ஓரளவு வரவேற்பை பெறும் நிலையில் இப்போது  ‘இங்கு நான் தான் கிங்’ திரைப்படமும் வழக்கம் போல வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Published by
Rohini