×

பழைய வீடியோவா இருந்தாலும் பொக்கிஷம் - மேடையில் குத்தாட்டம் போட்ட அஜித்!

தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகராக விளங்கி வரும் நடிகர் அஜித் கோடானகோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரர் இவரது படங்கள் வெளிவரும் நாளில் ரசிகர் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார். தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஜித் வேற்று மொழி படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதில்லை.

 

ஆனால்,  இவரது திரைப்படங்கள் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற  மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு அந்தந்த மாநிலங்களில் வெளியாகி ஹிட் அடித்து அஜித்திற்கு பேரும், புகழும் பெற்றுத்தந்துள்ளது. இப்பேற்பட்ட திரை ஜாம்பவானாக ஜொலித்துக்கொண்டிருக்கும் அஜித் படங்களில் தலை காட்டுவதுடன் சரி வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார்.

அதனால் தான் என்னவோ அவரை குறித்து எந்த ஒரு சிறிய செய்தி வெளியானாலும் அது பிரம்மிப்புடன் பார்க்கப்படும். அந்தவகையில் தற்ப்போது பல வருடங்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் நடன கலைஞர்களுக்காக Steps என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அஜித் செம மாசான குத்து டான்ஸ் போட்டு அந்த அரங்கத்தையே அதிரவைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாக பழைய வீடியோவாக இருந்தாலும் செம வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News