தலைவி த்ரிஷா யாருடன் டூயட் பாடியிருக்காரு பாருங்க!.. பால் டப்பாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!..
தமிழ் இசை உலகில் சமீப காலமாக அதிக கவனம் பெற்றுவரும் இளம் ராப் பாடகர்களில் ஒருவராக பால் டப்பா விளங்கி வருகிறார். தனித்துவமான ராப் பாணி, ஸ்ட்ரீட் மியூசிக் கலந்த வரிகள் மற்றும் இளைஞர்களை கவரும் இசை அமைப்புகள் மூலம் அவர் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷா அவரது பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள வீடியோ வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவரின் மிகவும் பிரபலமான பாடல்களில் காத்து மேல, 170CM, வைப் மற்றும் என் சீதை ஆகியவை இடம்பெறுகின்றன. இப்பாடல்கள் யூடியூப் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற தளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளன. மேலும் திரைப்பட இசையிலும் கவனம் செலுத்தி வரும் பால் டப்பா கலாட்டா, மக்கா மிஷி, காட் ப்ளஸ் யூ மற்றும் ஒ மாறா போன்ற பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியான அவரது பாடல்கள் மூலம் பரவலான வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக இளைஞர்களின் வாழ்க்கை முறை, நட்பு, காதல் மற்றும் நகர்ப்புற கலாச்சாரம் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்டு பாடல்கள் உருவாக்கி வருகிறார்.
இசை துறையில் முன்னேற்றம் கண்டுவரும் பால் டப்பா, தற்போது திரைப்படத்துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து புதிய இசை முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷா பால் டப்பாவுடன் பங்கேற்றதாக கூறப்படும் ஒரு இசை வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் பால் டப்பாவின் ரசிகர்கள் கூட்டம் மேலும் உயர்ந்துள்ளது.
