×

இரண்டே நாளில் எகிறிய டேட்டா பயன்பாடு - வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் வேண்டுகோள் !

ஊரடங்கால் மக்கள் அதிகளவில் இணையத்தைப் பயன்படுத்துவதால் நெட்வொர்க் நிறுவனங்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

 

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்று மூன்றாவது நாளாகியுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே இருப்பதால் அதிகளவில் செல்போன்களைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலரும் வீடுகளில் இருந்து வேலை செய்வதால் அதிகளவில் மொபைல் டேட்டாவை சார்ந்துள்ளனர்.

இந்நிலையில் செல்போன் நிறுவன கூட்டமைப்பின் இயக்குனர் ராஜன் மேத்யூஸ் கூறுகையில்கடந்த சில வாரங்களில் மொபைல் டேட்டா பயன்பாடு 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது இன்னும் அதிகமானால் மொபைல் டேட்டா வேகம் குறையும். இதனால் வீட்டிலிருந்து பணி புரியும் ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் மக்கள் மொபைல் டேட்டாவை சிக்கனமாக உபயோகப்படுத்துங்கள்என அறிவுறுத்தியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News