இதெல்லாம் ஒரு காமெடியா?!.. எஸ்.கே. படத்தை கலாய்த்த உதயநிதி!. ஆனா நடந்ததே வேற!...
Aug 15, 2024, 16:17 IST
Sivakarthikeyan: ஆரம்பத்தில் காமெடியான படங்களில் மட்டுமே நடித்து ஒட்டுமொத்த குடும்ப ரசிகர்களை கவர்ந்த நடிகராக விளங்கியவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளராக இருந்து சிவகார்த்திகேயன் அப்போதே பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவராக இருந்தார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் தான் சிவகார்த்திகேயன். அதன் அடிப்படையில் அவரை வெள்ளி திரைக்கு கொண்டு வந்தவர் தனுஷ். தான் நடித்த 3 என்ற படத்தில் ஒரு இரண்டாவது நாயகனாக சிவகார்த்திகேயனை போட்டார் தனுஷ். அந்த படத்திற்குப் பிறகு மெரினா என்ற படத்தில் தான் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். இதையும் படிங்க: உன்ன பாத்து பாத்து ஏங்கி போறோம்!.. டைட் பனியனில் சூடேத்தும் ஜெயிலர் பட நடிகை!.. இவருடைய ஹியூமரான நடிப்பு மக்களை வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா என அடுத்தடுத்து காமெடி கலந்த படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் .சிவகார்த்திகேயன் படம் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்ற மனநிலைமைக்கு மக்கள் மாறினார்கள். இருந்தாலும் தான் ஒரு ஆக்சன் ஹீரோவாக மாற வேண்டும் என்ற ஆசை சிவகார்த்திகேயனுக்கு இருந்தது. அது இப்போது உண்மையாகியிருக்கிறது. இந்த நிலையில் அவர் நடித்த ஒரு படத்தை பார்த்து எங்களுக்கு சிரிப்பே வரவில்லை என்றும் இதில் என்ன காமெடி இருக்கிறது? இதை காமெடி படம் என்றார்கள் என உதயநிதி ஸ்டாலின் ஒரு பேட்டியில் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கின்றது. இதையும் படிங்க: எப்பையுமே பிரசாந்துக்கு தான்பா ஃபர்ஸ்ட்டு… அந்த நடிகையை மிஸ் செய்த தளபதி!.. சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் டான். அந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வாங்கி இருந்தது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினும் அவருடைய நண்பர்களும் பார்த்தார்களாம்.
don படத்தைப் பார்க்கும்போது அவர்களுக்கு சிரிப்பே வரவில்லையாம். இதுவா காமெடி படம் என நினைத்துக் கொண்ட உதயநிதி சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு அந்த கல்லூரி போர்ஷனை மட்டும் கட் செய்து விடுங்கள். மற்றபடி ஓகே என கூறினாராம். இதையும் படிங்க: என்னுடைய பயோபிக்கை இவர்தான் எடுக்கனும்! பிரசாந்தின் ஆசையை நிறைவேற்றுவாரா? ஆனால் சிவகார்த்திகேயனோ மேலும் சில ஃபுட்டேஜ்களை சேர்த்து உதயநிதியிடம் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் கண்டிப்பாக இது ஒர்க் அவுட் ஆகும் என்றும் சிவகார்த்திகேயன் கூறினாராம். ‘படம் வெளியாகி தியேட்டரில் பார்க்கும்போது தான் எனக்கும் தெரிந்தது இது நான் பார்த்த படமா என்று? அந்த அளவுக்கு படம் ரசிகர்களையும் கவர்ந்தது. காமெடியாகவும் இருந்தது’ என உதயநிதி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.