Connect with us
Vaali

Cinema News

வயசானாலும் வாலியால் எப்படி பாட்டெழுத முடிஞ்சது தெரியுமா?? ஒரு சுவாரஸ்ய தகவல்…

வாலிப கவிஞர் என்று புகழப்பட்ட கவிஞர் வாலி, நான்கு தலைமுறை இசையமைப்பாளர்களோடு பணியாற்றியது குறித்தான ஒரு முக்கிய தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

வாலியின் பெருமை

தமிழ் சினிமாவின் பழம்பெரும் கவிஞராக திகழ்ந்த வாலி, தன்னை காலத்துக்கு ஏற்றார்போல் அப்டேட் செய்து வந்தவர். கிட்டத்தட்ட நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய பெருமைக்குச் சொந்தக்காரர் வாலி. இவர் எம்.எஸ்.விஸ்வநாதன் தொடங்கி, சங்கர்-கணேஷ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா,  யுவன் ஷங்கர் ராஜா, ஹாரீஸ் ஜெயராஜ், ஹிமேஷ் ரேஸ்மையா, அனிரூத் போன்ற பல டாப் இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

Vaali

Vaali

இந்த நிலையில் கவிஞர் வாலி, ஒரு கட்டுரையில் தான் வயதானாலும் எப்படி இந்த சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு வந்தது என்பதை குறித்து விரிவாக எழுதியுள்ளாராம். அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

வயதானாலும் பாடல் எழுதிய வாலி

ஒரு முறை ஏ.ஆர்.ரஹ்மான், வாலிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, “ஒரு படத்திற்கான பாடலை கம்போஸ் செய்யவேண்டும். இந்த பாடலை நீங்கள் எழுதினால்தான் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஆதலால் ஒரு ஏழு மணிக்கு ஸ்டூடியோவிற்கு வர முடியுமா?” என கேட்டிருக்கிறார். அதற்கு வாலி, “என்ன மன்னிச்சுக்கோப்பா, இப்போ இருக்குற உடல்நலத்துல என்னால ஸ்டூடியோவுக்கு வரமுடியாது. நீ என்னோட வீட்டுக்கு வந்தா நான் பாட்டெழுதித் தருகிறேன்” என கூறினாராம்.

அதற்கு ரஹ்மான், “அப்படி என்றால் இரவு 7 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வரட்டுமா?” என்று கேட்க, அதற்கு வாலி, “இல்லை, 7 மணிக்கு இன்னொரு கவிஞர் வீட்டிற்கு வருகிறார். ஆதலால் 9 மணிக்கு வா” என்று கூறியிருக்கிறார்.

AR Rahman

AR Rahman

கொட்டும் மழையிலும்..

ஏ.ஆர்.ரஹ்மான் கொட்டும் மழையிலும் சரியாக 9 மணிக்கு வாலியின் வீட்டிற்குச் சென்று அவரிடம் பாடல் வரிகளை வாங்கிவிட்டுச் சென்றாராம். அதே போல் இளையராஜா, ஹாரீஸ் ஜெயராஜ் போன்ற பலரும் வாலியின் வீட்டிற்கே சென்று பாடல் வரிகளை வாங்கிவிட்டுச் செல்வார்களாம்.

இது குறித்து வாலி அந்த கட்டுரையில் குறிப்பிட்டபோது, “இவர்களை போன்று சினிமாத் துறையில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் இசையமைப்பாளர்கள் கொடுத்த ஒத்துழைப்பின் காரணமாகத்தான் எல்லா வயதிலும் என்னால் பாடல்கள் எழுதமுடிந்தது” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வடிவேலு இந்த தப்பை செஞ்சிருக்கவே கூடாது- வைகைப்புயலை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்…

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top