விஜய், அஜித் பற்றிய கேள்விக்கு நச்சுனு பதில் கொடுத்த வடிவேலு..என்ன கோபமோ?
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கி வருபவர் நடிகர் வடிவேலு. முன்பு மாதிரி இப்போது நகைச்சுவையில் அவர் ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் அவர் நடித்த படங்கள் அனைத்துமே இன்றளவு மக்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகின்றன. அவருடைய பல காமெடி வசனங்கள் தான் இன்று பெரும்பாலானவர்களுக்கு மீம்ஸ்களாக பயன்பட்டு வருகின்றன.
எந்த ஒரு சோசியல் மீடியாவை பார்த்தாலும் வடிவேலுவின் காமெடி இல்லாத மீம்ஸுகளை நாம் பார்க்க முடியாது. எல்லாவித சூழ்நிலைகளுக்கும் அவருடைய அந்த காமெடி வசனங்கள் தான் மீம்ஸ்களாக பகிரப்பட்டு வருகின்றன. முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் அஜித் சூர்யா என அனைத்து நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கிறார் வடிவேலு. ஆனால் தற்போது அவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.
மாமன்னன் திரைப்படத்தில் ஒரு குணசத்திர கேரக்டரில் நடித்து சிறந்த நடிகர் வடிவேலு என்ற பெயரும் வாங்கினார். மாமன்னன் படத்தில் அவருடைய கதாபாத்திரம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. ஒரு காமெடி நடிகனுக்குள் இப்படி ஒரு நடிப்பு அரக்கனா என்ற அளவுக்கு பேசப்பட்டார் வடிவேலு. அதனைத் தொடர்ந்து அந்த மாதிரி கதாபாத்திரங்களிலேயே நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் சொல்லும் படியாக எந்த படங்களும் வரவில்லை .தற்போது கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் ஒரு நகைச்சுவை படம் என ஒரு பேட்டியில் வடிவேலு கூறியிருக்கிறார். சமீபத்தில் வடிவேலுவை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் விஜய் அஜித் பற்றிய கேள்விகளை அவரிடம் கேட்டனர். அதாவது விஜய் அரசியலுக்கு போய்விட்டார் என்று ஆரம்பித்ததுமே வேற ஏதாவது பேசலாமா என வடிவேலு அந்த கேள்வியை கடந்தார்.
இன்னொரு பத்திரிகையாளர் அஜீத் ரேஸுக்கு சென்று விட்டார் என்று ஆரம்பித்ததும் வேற ஏதாவது பேசலாமா என்று மறுபடியும் அந்த கேள்வியை கடந்து செல்வதிலேயே குறியாக இருந்தார் வடிவேலு. அந்த வீடியோ தான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது