சரோஜாதேவிகிட்டயே வம்பிழுத்த வடிவேலு.. எம்ஜிஆர் கூட நடிச்சவங்க! சும்மா இருப்பாங்களா?
தமிழ் சினிமாவில் நாகேஷுக்கு அடுத்தபடியாக நகைச்சுவையில் மிகப் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகர் வடிவேலு. வைகை புயல் என்ற அடைமொழியோடு தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர். தன்னுடைய முகபாவனையாலும் எதார்த்தமான காமெடியாலும் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் வடிவேலு. கவுண்டமணி செந்தில் இவர்கள் நகைச்சுவையில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த போது இந்த சினிமாவிற்குள் ஒரு துணை நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.
அதன் பிறகு படிப்படியாக தன்னுடைய பாப்புலரான காமெடியால் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக மாறினார் .விஜய் ,அஜித், விஜயகாந்த், சரத்குமார், கமல் ,ரஜினி என சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் இவர்களின் படங்களில் ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக் கொண்டார். ஒரு காலத்தில் கவுண்டமணி கால்ஷீட்டுக்காக ரஜினிகாந்த் காந்திருந்த காலம் போய் வடிவேலுவின் கால்சீட்டுக்காக காத்திருந்த நடிகர்கள் ஏராளமானோர்.
இந்த நிலையில் சமீபகாலமாக வடிவேலுவை பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வந்தன. உடன் நடித்தவர்களுக்கு ஒழுங்காக சம்பளம் கொடுக்காதது ,தனக்கு அடிமையாக வைத்திருப்பது என பல விமர்சனங்கள் அவர் மீது எழுந்தன. இந்த நிலையில் ஆதவன் படத்தில் நடிகை சரோஜாதேவியிடமே வம்பு இழுத்த வடிவேலுவின் கதை பற்றி இயக்குனர் ரமேஷ் கண்ணா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அந்த படத்தில் ஒரு காட்சியில் ‘மேல ஒரு அம்மா முகம் நிறைய பவுடர் போட்டுட்டு படுத்து இருக்கும். போய் பாரு’ என வடிவேலு சொந்தமாகவே அந்த வசனத்தை பேசி இருந்தாராம். அதைக் கேட்டதும் சரோஜாதேவி ரமேஷ் கண்ணாவுக்கு போன் செய்து ‘நான் உன்னிடம் சான்ஸ் கேட்டேனா? எதுக்கு இந்த படத்தில் என்னை நடிக்க கூப்பிட்ட? அவன் அந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கான் ’என கோபப்பட்டாங்களாம்.
அதற்கு ரமேஷ் கண்ணா ‘அவன் லூசு மாதிரி பேசிக்கிட்டு இருப்பான். அதையெல்லாம் கண்டுக்காதீங்க’ என சொன்னாராம். அதற்கு சரோஜாதேவி ‘ நான் என்ன மனோரமா மாதிரி காமெடி ஆர்டிஸ்ட்டா? ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயின்’ என சொன்னாராம் சரோஜாதேவி. அதன் பிறகு இந்த பிரச்சனை எப்படியோ சுமூகமாக சரியாகி விட்டது என ரமேஷ் கண்ணா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.