Categories: Cinema News latest news

முன்னணி நடிகர்களே செய்யாததை விஷயத்தை செய்த நபர் வடிவேலு தான்.! அடித்து கூறும் பிரபலம்.!

தற்போது உள்ள தமிழ் சினிமாவின் நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. ஒரு படத்தின் வசூல் எவ்வளவு ? எத்தனை நாட்களில் 100 கோடி வசூல் செய்தது? அந்த கதாநாயகர்களின் சம்பளம் எவ்வளவு ? அவர் 100 கோடியை தாண்டி விட்டாரா இல்லையா? என்பதே தற்போதைய நிலையாக உள்ளது.

ஆனால், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக கடுமையாக உழைத்து இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் மிகப்பெரிய வெற்றிகளை அடைந்து வருகின்றனர்.

இத்தனை கோடி சம்பளம் வாங்கும் பெரிய பெரிய நடிகர்கள் கூட தங்களது கதை தேர்வு குறித்து அவர் தனியாக குழு அமைத்து கதை கேட்பதற்கு நியமித்தது இல்லை. ஆனால், காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு இதனை ஆரம்ப முதலே செய்து வருகிறாராம்.

அதாவது, அவர் தனக்கு நெருக்கமானவர்களை ஒரு குழுவாக அமைத்து தனது பட காமெடி காட்சிகளை உருவாக்குவாராம். ஒரு இயக்குனர் புதிய படம் கதையை கூறிவிட்டால், அந்த கதையில் தன்னால் எப்படி காமெடி செய்ய முடியும் என்பதை அந்த குழுவுடன் இணைந்து பணியாற்றி, அதன் பின்னர் காமெடி கதை களத்தை உருவாக்கி அந்த படத்தில் நடிப்பாராம்.

இதையும் படியுங்களேன் – அடுத்த ராக்கி பாய் சூர்யா தான்.!? வெளியான அதிரடி அறிவிப்பு.! திணறும் இன்டர்நெட்.!

இதனை பின்பற்றி அடுத்ததாக நடிகர் சந்தானம் கூட, தனது படத்தின் காமெடி எப்படி இருக்க வேண்டும் என்று அவர் காமெடியனாக இருந்த நேரத்தில் ஒரு குழு அமைத்து அதில் விவாதித்து அதன்பிறகு காமெடி கவுண்டர்களை எழுதி நடிப்பாராம்.

Manikandan
Published by
Manikandan